தமிழ்நாட்டிலும் புதுவையிலும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு ஏப்ரல் .6 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த 4,216 மையங்களில் 9.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதில் 37,798 தனித்தேர்வர்கள், 13,151 மாற்றுத் திறனாளிகள், 5 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 2,640 சிறை கைதிகள் அடங்குவர். இவர்களின் விடைக்குறிப்புகள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மே 19-ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு முடிகள் வெளியாகிறது. அதனை, https://www.dge.tn.gov.in/ http://tnresults.nic.in/ ஆகிய இணைய தளங்களில் காணலாம். மாணவர்கள், ஏற்கனவே தங்கள் பள்ளிகளில் கொடுத்துள்ள செல்போன் எண்களிலும் ரிசல்ட் அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

