மாணவர் சேர்க்கை தொடர்பாக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் செய்திக்குறிப்பு:
‘’தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்துடன் இணையப்பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 15.05.2023 முதல் 31.05.2023 வரை சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். முன்றாண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்’’
சீர்மிகு சட்டப்பள்ளி – 5 ஆண்டுகள்:
1) பி.ஏ.எல்.எல்.பி. (B.A.LL.B.(Hons.) Degree Course )
2) பி.பி.ஏ.எல்.எல்.பி. (B.B.A.LL.B.(Hons.) Degree Course)
3) பி.காம்.எல்.எல் பி. (B.Com.LL.B.(Hons.) Degree Course)
4) பி.சி.ஏ.எல்.எல்.பி (B.C.A.LL.B.(Hons.) Degree Course)
கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு/ 3 ஆண்டு டிப்ளமோ/ பாலிடெக்னிக் ஆகிய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.காம்.எல்.எல்.பி., படிப்பு-க்கு விண்ணப்பிப்போர் 12-ம் வகுப்பில் வணிகவில் அல்லது அது தொடர்பான பாடம் படித்திருக்க வேண்டும். பி.சி.ஏ.எல்.எல்.பி., படிப்பில் சேர விரும்புவோர் 12-ம் வகுப்பில் கம்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு நிகரான பாடம் படித்திருக்க வேண்டும்.
மதிப்பெண்: இந்த படிப்புகளில் சேர எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு தகுதித் தேர்வில் (12-ம் வகுப்பு/ 3 ஆண்டு டிப்ளமோ/ பாலிடெக்னிக்) 60 சதவிகித மதிப்பெண்களுக்கு குறைவில்லாத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்றவர்கள் (என்.ஆர்.ஐ உள்பட) 70 சதவிகித மதிப்பெண்களுக்கு குறைவில்லாத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., ரூ.500. மற்றவர்கள்: ரூ.1000. என்.ஆர்.ஐ:200 அமெரிக்க டாலர்
அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள்:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் மற்றும் இணைவு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் 5 ஆண்டு சட்டக் கல்வி படிப்பில் சேர 12-ம் வகுப்பு/ 3 ஆண்டு டிப்ளமோ/ பாலிடெக்னிக் ஆகிய படிப்புகள் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் 40 சதவிகிதம், மற்றவர்கள் 45 சதவிகிதம் மதிப்பெண்களுக்கு குறையாத அளவில் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., ரூ.250 மற்றவர்கள்: ரூ.500
விண்ணப்பிப்பது எப்படி: சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிபிஏ எல் எல் பி மற்றும் பிஏ எல் எல் பி ஆகிய படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் போதுமானது. என்.ஆர்.ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்போர், அதற்கான விண்ணப்பத்தை உரிய பணம் செலுத்தி மாணவர் சேர்க்கை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
ஏதேனும், கூடுதல் தகவலோ அல்லது விண்ணப்பம் போடுவதில் ஏதேனும் பிரச்னை என்றால் tndaluadmissions@gmail.com என்ற இமெயில் மூலமோ அல்லது +917200043361 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கோள்ளலாம்.
அரசு சட்டக் கல்லூரிகள், இணைவு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகள்:
1 Chennai Dr. Ambedkar Government Law College, Pudupakkam- 631 203
2 Chennai Dr. Ambedkar Government Law College, Pattarai Perumpudur – 631 203
3 Government Law College, Madurai – 625 020
4 Government Law College, Tiruchirapalli – 620 023
5 Government Law College, Coimbatore – 641 046
6 Government Law College, Tirunelveli – 627 011
7 Government Law College, Chengalpattu – 603 001
8 Government Law College, Vellore – 623 006
9 Government Law College, Villupuram – 605 602
10 Government Law College, Dharmapuri – 636 701
11 Government Law College, Ramanathapuram – 623 501
12 Government Law College, Salem – 636 010
13 Government Law College, Namakkal – 637 001
14 Government Law College, Theni – 625 534
15 Government Law College, Karaikudi – 630003
16 Saraswathy Law College (Private), Tindivanam – 604 307
17 Mother Terasa Law College (Private), Pudukottai – 622 102
18 KMC College of Law (Private), Tiruppur – 641 605
19 Erode College of Law (Private), Erode – 638 453
20 G.T.N. Law College (Private), Dindigul – 624 005
21 S. Thangapazham Law College (Private), Tenkasi – 627 758
22 Thulasi College of Law for Women (Private), Tuticorin – 628 252
23 Mugil College of Law (Private), Kanyakumari – 629 172

