’’1600 மத்திய அரசு வேலை; கல்வித்தகுதி 12-ம் வகுப்பு..!’’ ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-தேதி கடைசி.நாள்

மத்திய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1600 பணி இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி 12-ம் வகுப்பு.தான். இத்தேர்வை தமிழ் வழியிலும் எழுதலாம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8,ம் தேதி கடைசி.நாள் ஆகும்.

0
113

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கணினி இயக்குபவர் மற்றும் கீழ்நிலை பிரிவு எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயதுவரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள். ஓ.பி.சி.பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

மொத்த பணிக்காலியிடங்கள் தோராயமாக 1,600 (இந்தியா முழுவதும்). இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.6.2023 ஆகும். மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த போட்டி தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்