மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27-ன்படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில், தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு
மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு
வழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதித்திட்டம் தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்
திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள், அலுவலகத்தில்
அல்லது களஆய்வின் போது குறைகேள் அலுவலரிடம் பதிவு செய்யப்படலாம் என
தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து
புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளிலிருந்து, 15 நாட்களுக்குள்
முடிக்கப்படுகிறது. மீதமுள்ள புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது.
குறைகேள் அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம்
பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள்
போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட
வலைதளத்தில் வெளியிடப்படுகிறது.
மாவட்டம் வாரியாக, குறைதீர்ப்பாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களுடைய
கைப்பேசி எண்களின் விவரம் கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளது.
1 அரியலூர் எஸ்.வைத்தீஸ்வரன் 8925811301
2 செங்கல்பட்டு தினேஷ்குமார்மார்ட்டின் 8925811302
3 கோயம்புத்தூர் பி, நவநீதகிருஷ்ணன் 8925811303
4 கடலூர் எம். ஏஞ்சல் கேத்தரின் 8925811304
5 தருமபுரி கே. தௌலத் பாஷா 8925811305
6 திண்டுக்கல் சி.ஓம் பிரகாஷ் 8925811306
7 ஈரோடு எல். பாலகிருஷ்ணன் 8925811307
8 கள்ளக்குறிச்சி பி.இரமேஷ் 8925811308
9 காஞ்சிபுரம் வி.கணேசன் 8925811309
10 கன்னியாகுமரி ஏ. சத்தியசீலன் 8925811310
11 கரூர் என். பாலசுந்தரம் 8925811311
12 கிருஷ்ணகிரி கே.எஸ்.எம்டி.அஸ்மத்துல்லா 8925811314
13 மதுரை பி.பாலசுப்ரமணியன் 8925811315
14 மயிலாடுதுறை டி.மோகன் 8925811316
15 நாகப்பட்டினம் எஸ்.முருகேசன் 8925811317
16 நாமக்கல் டி.சியாமளா 8925811318
17 பெரம்பலூர் பி.ஜானகிராமன் 8925811319
18 புதுக்கோட்டை எம். ரகோத்துமன் 8925811320
19 ராமநாதபுரம் பி.ராமமூர்த்தி 8925811321
20 இராணிப்பேட்டை ஜி.கோபிநாத் 8925811322
21 சேலம் எம்.காந்திமதி 8925811323
22 சிவகங்கை யு.பிரபு 8925811324
23 தஞ்சாவூர் ஆர்.கலைவாணி 8925811325
24 நீலகிரி எம்.என்.சிவதேவ்குமார் 8925811326
25 தேனி கே.சந்திரசேகரன் 8925811328
26 தென்காசி ஆர்.ஜெயகுமார் 8925811329
27 தூத்துக்குடி பி.சேவகபாண்டி 8925811330
28 திருச்சிராப்பள்ளி பி.பாண்டியராஜன் 8925811331
29 திருநெல்வேலி மாணிக் பிரபு 8925811332
30 திருப்பத்தூர் ஜெ. மகாலட்சுமி 8925811338
31 திருப்பூர் எம்.பிரேமலதா 8925811339
32 திருவள்ளூர் ஜே.சைமன் அருள்பிரகாசம் 8925811340
33 திருவண்ணாமலை யு.அண்ணாமலை 8925811341
34 திருவாரூர் வி.கதிரேசன் 8925811342
35 வேலூர் எல்.ரஞ்சிதா 8925811344
36 விழுப்புரம் என்.தஸ்லீம் ஆரிஃப் 8925811345
37 விருதுநகர் வி.பெரியசாமி 8925811346
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்
பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான
குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளர்களின்
தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.




