Home செய்திகள் ’’வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!’’

’’வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!’’

0
’’வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு..!’’

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நடைபெற்று வரும் 2 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜயகரிசல்குளம். இங்கு இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஏற்கனவே, தங்க அணிகலன், தங்கப்பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல்விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொம்மையானது, கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. இதன் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டும் வகையில் உள்ளது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்கள் கீறல் வடிவில் செய்யப்பட்டுள்ளன.

வாய், மூக்கு, காதுகள் தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது.

அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை பண்டைய மனிதர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதத்தில் உள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here