இந்திய ராணுவத்தில் நர்சிங் சேவை பிரிவில் நான்காண்டு பி.எஸ்.சி நர்சிங் படிப்பில் சேர்வதற்கான அழைப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 220 சீட்கள் உள்ளன. நீட் 2023 தேர்வில் வெற்றிபெற்ற பெண் விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்வித்தகுதி : முதல் முயற்சியிலேயே 12-ம் வகுப்பு பாஸ் ஆகி இருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், பயாலஜி (பாட்டனி & ஜூவாலஜி) மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுக்கு குறையாமல் பாஸ் ஆகி இருக்க வேண்டும்.
நீட் தேர்வு தகுதி: நீட் 2023 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.10.1998 மற்றும் 30.09.2006 ஆகிய தேதிகளுக்கு உள் பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது).
திருமணத் தகுதி: திருமணம் ஆகாதவர், திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர், திருமணம் ஆகி சட்டப்படி பிரிந்து வாழ்பவர்.
என்சிசி சான்றிதழ்: என்சிசி ’சி’ சான்றிதழ் வைத்திருக்கும் ஆட்சேபகர்கள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது என்சிசி ’சி’ சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பத்தாரர்கள் பட்டியல் தாயார் செய்யப்படும். அவர்களுக்கு, பொது அறிவு, பொது ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து கொள்குறி வகையில் கணிணி வழியில் தேர்வு நடக்கும். அதன்பின்னர், மனநல தேர்வும் நேர்முகத்தேர்வும் உண்டு. இதன்பின்னரே, இறுதி பட்டியல் வெளியாகும். மருத்துவ பரிசோதனைகளும் உண்டு.
மொத்தம் சீட் : ஆறு கல்லூரிகளில் மொத்தமாக 220 நர்சிங் சீட்கள் உள்ளன. நான்கு ஆண்டு கால படிப்புக்கு பின்னர், மிலிட்டரி (இராணுவ) நர்சிங் சரிவிஸ்-ல் நிர்ந்தரமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். படிக்கும் காலத்தில் படிப்பு செலவு, உணவு, விடுதி என்று அனைத்து செலவுகளையும் ராணுவம் ஏற்றுக் கொள்ளும்.
விண்ணப்பிப்பது எப்படி?: நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள் https://joinindianarmy.nic.in/ என்ற இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.