கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன், பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியதாவது:
நடப்பு குறுவை மற்றும் சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது. மாநிலத்தின் உரத் தேவையில் 25 சதவீதம் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விவசாயப் பெருமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது. இதில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையமும் (TCMF) இதர மாவட்டங்களுக்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED) உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்குகின்ற பணியினை மேற்கொண்டு வருகின்றன.
நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் பல்வேறு உர நிறுவனங்களிடமிருந்து தருவிக்கப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் முன்னிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜ]ன் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் நாளது தேதியில், 12,785 மெ.டன் யூயாவும், 9,873 மெ.டன் டி.ஏ.பி, 4,909 மெ.டன் பொட்டாஷ், மற்றும் 6,927 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ஆகமொத்தம் 34,494 மெ.டன் உரம் இருப்பாக உள்ளது. இதே போன்று, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பருவ மழை துவங்கி உள்ள நிலையிலும், மேலும் சில நீர்த் தேக்கங்களிலிருந்து விவசாயப் பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும், மாநிலம் முழுவதும் உள்ள 4,433 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் 34,224 மெ.டன் ôரியாவும், 23,300 மெ.டன், டி.ஏ.பி. உரமும், 11,535 மெ.டன் பொட்டாஷ் உரமும், 27,607 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரமும், ஆகமொத்தம் 96,666 மெ.டன் உரங்கள் இருப்பாக உள்ளது.
மேலும், சம்பா பருவத்திற்கும் தேவையான உரங்களை கூட்டுறவுகளில் போதுமான அளவு இருப்பு வைப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. நாளது தேதியில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையக் கிடங்குகளில் (Buffer Godown) 5,947 மெ.டன் ôரியாவும், 5,444 மெ.டன், டி.ஏ.பி. உரமும், 3,287 மெ.டன் பொட்டாஷ் உரமும், 7,598 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரமும் கூடுதல் 22,276 மெ.டன் ஆகவும், கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 1,18,942 மெ.டன் உரம் இருப்பு உள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் உரங்கள் பெறுவதில் ஏதேனும் இடர்பாடுகள் இருப்பின், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தினை 78457 65003 என்ற தொலைபேசி எண்ணிலும், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தினை 80981 79033 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், மாவட்ட அளவில் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரை கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொண்டு இடர்பாடுகளின்றி உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்டம் | கைப்பேசி எண். | மாவட்டம் | கைப்பேசி எண். |
அரியலூர் | 7338720200 | தஞ்சாவூர் | 7338721900 |
கோயம்புத்தூர் | 7338720301 | தேனீ | 7338722001 |
கடலூர் | 7338720401 | திருநெல்வேலி | 7338722100 |
தர்மபுரி | 7338720501 | திருப்பூர் | 7338720334 |
திண்டுக்கல் | 7338720601 | திருவள்ளூர் | 7338749100 |
ஈரோடு | 7338720701 | திருவாரூர் | 7338749200 |
காஞ்சிபுரம் | 7338720801 | திருச்சி | 7338749300 |
கன்னியாகுமரி | 7338720901 | தூத்துக்குடி | 7338749400 |
கரூர் | 7338721001 | திருவண்ணாமலை | 7338749500 |
கிருஷ்ணகிரி | 7338720525 | வேலூர் | 7338749600 |
மதுரை | 7338721100 | விழுப்புரம் | 7338749700 |
நாகப்பட்டினம் | 7338721201 | விருதுநகர் | 7338749800 |
நாமக்கல் | 7338721300 | திருப்பத்தூர் | 9176001553 |
நீலகிரி | 7338721400 | இராணிப்பேட்டை | 8939300183 |
பெரம்பலூர் | 7338720216 | தென்காசி | 9176001541 |
புதுக்கோட்டை | 7338721500 | கள்ளக்குறிச்சி | 9176001549 |
இராமநாதபுரம் | 7338721600 | மயிலாடுதுறை | 9176001546 |
சேலம் | 7338721700 | செங்கல்பட்டு | 9176001544 |
சிவகங்கை | 7338721801 |