இந்தியவில் உள்ள கலை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் பணியில் சேர ஆய்வு படிப்பு (பிஎச்டி), அல்லது யுஜிசி நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சமீபத்தில், நடந்த கல்லூரி விரிவுரையாளர் தேர்வை நாடு முழுவதும் 15 லட்சம் பேர் எழுதினர். ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கும் இத்தேர்வின் ஜூன் தேர்வு அறிவிப்பு இப்போது வெளியாகி இருக்கிறது.

தேர்வு : யுஜிசி நெட் 2023

கல்வித் தகுதி: விரிவுரையாளர் பணி விணப்பத்தாரர்கள் தங்கள் முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பென்கள் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள்.

முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் தேர்வு தேதிக்கு முன்னதாக பிஎச்டி பட்டம் பெற்றிருந்தால் குறைந்த பட்ச மதிப்பெண்களில் 5 சதவிகிதம் தளர்வு அளிக்கப்படும்.

வயது வரம்பு: இளநிலை ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்) பிரிவில் விண்ணப்பிக்க பொதுப்பிரிவினருக்கு 30ஆண்டுகள், எஸ்சி,எஸ்டி,  ஓபிசி, ஊனமுற்றோர் ஆகிய பிரிவினருக்கு 35 ஆண்டுகள், எல்.எல்.எம் பட்டம் பெற்றவர்களுக்கு 33 ஆண்டுகள். விரிவுரையாளர் பணி தேர்வுக்கு வயதில் உச்ச வரம்பு இல்லை.

தேர்வு முறை: யுஜிசி நெட் 2023 தேர்வு முறை தாள் ஒன்று, தாள் இரண்டு என்று இரண்டு பிரிவுகளைக் கொண்டது.

தாள் ஒன்று: தாள் ஒன்றில் 50 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். கொள்குறி வகையில் வினாக்கள் இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள 4 விடைகளில் மிகச்சரியான ஒரு விடையை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு விடைக்கும் இரு மதிப்பெண். அதிகபட்ச மொத்த மதிப்பெண் 100. தேர்வு காலம் 60 நிமிடங்கள்.

தாள் இரண்டு: தாள் இரண்டில் 100 கேள்விகள் உண்டு. கொள்குறி வகையில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் மதிப்பெண் 2. மொத்த மதிப்பெண் 200. தேர்வு காலம் 120 நிமிடங்கள்.

இந்த இரண்டு தேர்வு தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும். சரியான ஒவ்வொரு விடைக்கு 2 மதிப்பெண் கொடுக்கப்படும். தவறாக விடைக்கு நெகட்டிவ் (மைனஸ்) மதிப்பெண் கிடையாது.

குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண்கள்: பொதுப்பிரிவினர், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் 40 சதவிகிதம், (120 மதிப்பெண்கள்), ஓபிசி, எஸ்சி, எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 35 சதவிகிதம் (105 மதிப்பெண்கள்). இது குறைந்தபட்ச மதிப்பெண். ஒவ்வொரு தேர்விலும் போட்டியாளர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், கட் ஆப் மதிப்பெண் அதிகரிக்ககூடும்.

தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.1,150, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், ஓபிசி பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரக்ளுக்கு ரூ.325 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்: மே 10-ம் தேதி முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை இத்தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்த ஜூன் 1 -தேதி நள்ளிரவு 11.50 மணி. விண்ணப்பத்தில் தவறுகள் இருந்தால் ஜூன் 2-3 தேதிகளில் திருத்தம் செய்து கொள்ளலாம். ஜூன் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்.

பாடத்திட்டம், முந்தைய வினாத்தாள், ஹால் டிக்கெட் ஆகியவற்றை https://nta.ac.in/ என்ற இணையத்தில் கிடைக்கும். இத்தேர்வு குறித்த அப்டேட்களை அறிய இந்த இணையத்தை தேர்வெழுதுவோர் அடிக்கடி பார்க்க வேண்டும். நமது, மெட்ராஸ் முரசு https://madrasmurasu.com/ இணையத்திலும் தேர்வுகள் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியிடப்படும்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்