Home செய்திகள் உலகம் ”மலை­யக தமிழ் மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும்..!” கொழும்பு ’நாம்200’ மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

”மலை­யக தமிழ் மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும்..!” கொழும்பு ’நாம்200’ மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

0
”மலை­யக தமிழ் மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும்..!” கொழும்பு ’நாம்200’ மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள்! அவர்களது துயர்துடைக்க கழகம் எப்போதும் குரல் கொடுக்கும்! என்றும், மலையகத் தமிழர்களின் நீதியும், உரிமையும் நிலை நாட்டப்பட வேண்டும்! எனவும், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் ஆவதை நினைவுகூறும் “நாம் 200” என்ற தேசிய நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

இந்­திய வம்­சா­வளி மலை­ய­கத் தமி­ழர்­கள் இலங்­கைக்­குச் சென்று 200 ஆண்­டு­கள் (1823 – – 2023) ஆவதை நினை­வு­கூ­ரும் வகை­யி­லும், அவர்­கள் இலங்­கைக்கு ஆற்­றிய சேவை­க­ளை­யும், இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரத்­துக்கு வழங்­கிய பங்­க­ளிப்­பைப் பாராட்­டி­யும் இலங்கை மத்­திய அர­சாங்­கத்­தின் பங்­க­ளிப்­பு­டன் இலங்கை அமைச்­சர் ஜீவன் தொண்­ட­மான் அவர்­க­ளால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட ‘நாம் 200’ என்ற தலைப்­பி­லான தேசிய நிகழ்­வில் (கொழும்பு), முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயி­லாக வழங்­கிய வாழ்த்­துரை வரு­மாறு:–

அனை­வ­ருக்­கும் வணக்­கம்!

இலங்­கை­யில் வாழும் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளின் வாழ்வு என்­பது 200 ஆண்­டு­களை எட்­டு­கி­றது. இரண்டு நூற்­றாண்­டு­கா­ல­மாக தனிப்­பெ­ரும் இன­மாக வாழ்ந்­து­வ­ரும் மலை­ய­கத் தமிழ் மக்­க­ளுக்கு எனது வாழ்த்­து­கள்!

இந்த நிகழ்ச்­சி­யில் நான் காணொலி மூல­மாக உரை­யாற்ற வேண்­டும் என வேண்­டு­கோள் விடுத்த அருமை சகோ­த­ரர் ஜீவன் தொண்­ட­மான் அவர்­க­ளுக்கு எனது நன்­றியை முத­லில் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

காடு­களை மாற்­றிய மலை­ய­கத் தமி­ழர்­கள்!

மனி­தன் வாழ்ந்­தி­ராத மலைக் காடு­களை மலை­ய­கத் தோட்­டங்­க­ளாக மாற்­றி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள்! மலை­ய­கத் தமிழ்த் தொழி­லா­ளர்­க­ளின் வர­லாறு – இலங்­கை­யில் காப்பி பயிர் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கா­லம் முதல் தொடங்­கு­கி­றது.

1823-ஆம் ஆண்டு கம்­ப­ளைக்கு அருகே உள்ள சிங்­க­பிட்­டிய என்ற கிரா­மத்­தில் கேப்­டன் ஹென்றி பேட் என்ற பிரிட்­டிஷ்­கா­ரர், 14 இந்­தி­யத் தொழி­லா­ளர்­க­ளை­யும் சில சிங்­க­ளத் தொழி­லா­ளர்­க­ளை­யும் வைத்து காப்­பித் தோட்­டம் தொடங்­கி­னார். இது இலங்­கைப் பொரு­ளா­தா­ரத்­தில் மகத்­தான மாற்­றத்தை உரு­வாக்­கி­யது.

காப்­பித் தோட்­டங்­கள் பெரு­கப்­பெ­ருக இந்­தி­யத் தொழி­லா­ளர்­கள் ஏரா­ள­மாக இலங்­கைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். காப்பி தோட்­டத்­தை­ய­டுத்து தேயி­லைத் தோட்­டங்­கள் அதி­க­மா­னது. அத­னை­யும் மலை­ய­கத் தமி­ழர்­கள் வளப்­ப­டுத்­தி­னார்­கள். பின்­னர் ரப்­பர், தென்னை என அனைத்­துப் பணப் பயிர்­க­ளது உற்­பத்­தி­யும்மலை­ய­கத் தமி­ழர்­க­ளது உழைப்­பால் உரு­வா­ன­து­தான்.

மகத்­தான பங்­க­ளிப்பை வழங்­கும் தமி­ழர்­கள்!

பயி­ரி­டப்­ப­டாத நிலத்தை பயி­ரிட்­டும் – காடு­க­ளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்­க­ளாக விளை­வித்­தும் பின்­தங்­கிய பொரு­ளா­தா­ரத்தை முன்­னணி பொரு­ளா­தா­ர­மாக ஆக்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தோட்­டத் தொழி­லா­ளர்­கள்! இப்­படி கடந்த 200 ஆண்­டு­க­ளாக இலங்­கை­யின் நல்­வாழ்­வுக்கு மகத்­தான பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ள­னர். இன்­ன­மும் வழங்கி வரு­கின்­ற­னர்.

அதா­வது இலங்கை நாட்­டுக்­காக தங்­க­ளது உழைப்பை வழங்­கி­ய­வர்­கள் மலை­ய­கத் தமி­ழர்­கள். இலங்கை நாடு உயர உழைத்­த­வர்­கள். தங்­க­ளது ரத்­தத்­தை­யும் வியர்­வை­யை­யும் காலத்­தை­யும் கட­மை­யை­யும் அந்த நாட்­டுக்­கா­கவே ஒப்­ப­டைத்­த­வர்­கள்.

திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தோன்­றிய காலம்­மு­தல் புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளது உரி­மை­யைக் காப்­ப­தில் கண்­ணும் கருத்­து­மா­கச் செயல்­பட்­டுள்­ளது.

எப்­போ­தும் குரல் கொடுக்­கும் கழகம்!

1952-ஆம் ஆண்டு தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்­டில் பேசும்­போது பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், “இலங்கை வாழ் திரா­விட மக்­க­ளுக்­காக ஓட்டு உரி­மை­யைக் கொடுத்து நீதியை நிலை­நி­றுத்­துங்­கள். ஜன­நா­ய­கத்­தைக் கேலி செய்­யா­தீர். வீண் போக்கு வெற்­றி­யைத் தராது” என்று பேசி­னார்.

தி.மு.க.வின் இரண்­டா­வது மாநில மாநாட்­டில் தனி தீர்­மா­னமே நிறை­வேற்­றப்­பட்­டது. 1957 தேர்­தல் அறிக்­கை­யில், தமி­ழர்­கள் நிறைந்­துள்ள வெளி­நா­டு­க­ளில், தமி­ழர்­களே தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட வேண்­டும் என்று திமுக கோரி­யது. இப்­படி தமிழ் மக்­க­ளது உரி­மை­க­ளுக்­காக ஆரம்­ப­கா­லம் முதல் குரல் கொடுக்­கும் இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.

“கடல் நீர் உப்­பாக இருப்­பது ஏன்? அது கடல் கடந்த தமி­ழர்­க­ளின் கண்­ணீ­ரால்!” என்று எழு­தி­னார் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்.

மலை­ய­கத் தமி­ழர்­கள் தமிழ்­நாட்­டிற்கு திரும்­பி­ய­போது அவர்­களை அர­வ­ணைத்து தமி­ழக மலைப்­ப­கு­தி­க­ளில் குடி­ய­மர்த்தி TANTEA, அரசு ரப்­பர் தோட்­டங்­கள் மூலம் அவர்­கள் வாழ்­வில் உயர வழி­வகை செய்­தோம்.

தொப்­புள்­கொடி உற­வு­க­ளுக்கு தமிழ்­நாடு என்­றும் துணை நிற்­கும்!

அந்த உணர்­வோ­டு­தான் அனைத்­துப் பிரச்­சி­னை­க­ளை­யும் அணுகி துயர் துடைக்­கும் பணி­க­ளில் நாங்­கள் ஈடு­பட்டு வரு­கி­றோம். உரிமை காக்­க­வும் உத­வி­கள் செய்து வரு­கி­றோம். அந்த வகை­யில், மலை­யக தமிழ் மக்­க­ளின் நீதி­யும் உரி­மை­யும் நிலை­நாட்­டப்­பட வேண்­டும் என்றுகேட்­டுக் கொள்­கி­றேன்.

மலை­யக தமி­ழர்­க­ளின் குழந்­தை­க­ளின் கல்­விக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட வேண்­டும். இலங்­கை­யில் வாழும் அனைத்து மக்­க­ளை­யும் போல கல்­வி­யி­லும் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­தி­லும் அவர்­கள் மேலெ­ழும்­பும் காலத்தை எதிர்­நோக்கி தமிழ்­நாடு காத்­தி­ருக்­கி­றது. கல்வி, சுகா­தா­ரம், வாழிட உரி­மை­கள், பொரு­ளா­தார உத­வி­கள், சமூக உரி­மை­கள் அனைத்­தும் வழங்­கப்­பட வேண்­டும்.

நாட்டை வாழ வைத்த மக்­களை வாழ வைக்க அனைத்து நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­பட வேண்­டும். அதற்­காக தொப்­புள் கொடி உற­வு­க­ளான தமிழ்­நாடு என்­றும் குரல் கொடுக்­கும். நன்றி. வணக்­கம்.

இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்­துறை வழங்­கி­னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here