மருத்துவம் (டாக்டர்), பல் மருத்துவம் (பல் டாக்டர்), பாராமெடிக்கல் (நர்ஸ், பார்மஸி, பிசியோதெரபி உள்ளிட்ட 19 படிப்புகள்) ஆகியவற்றுக்கு மாணவர்கள் சேர்க்கைககன ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி விட்டது. ஜுலை 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் & பல் மருத்துவம் : நீட் 2023- தேர்வில் தகுதி மதிப்பெண் எடுத்தவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 7.5% ஒதுக்கீடு, மாநில அரசு ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, சிறுபான்மை ஒதுக்கீடு, என்.ஆர்.ஐ ஒதுக்கீடு என்று 6 பிரிவுகளில் தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவ கலந்தாய்வில் ஒதுக்கீடு பிரிவுகள் உள்ளன. 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மொத்தம் 5050 இடங்கள் இருக்கிறது. சென்னை கே.கே.நகர் அரசு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 125 இடங்கள் உண்டு. இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 19 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரி சேர்க்கை குறித்த தகவல் குறிப்பேட்டை முழுமையாக படித்து அதன்பிறகு விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்று இரண்டு விண்ணப்பங்கள் இதற்கு உண்டு.
பாராமெடிக்கல் படிப்புகள்:
B.PHARM
B.P.T.
B.ASLP
B.Sc. (NURSING)
B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY
B.Sc. RADIO THERAPY TECHNOLOGY
B.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY
B.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGY
B.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY
B.Sc. CARDIAC TECHNOLOGY
B.Sc. CRITICAL CARE TECHNOLOGY
B.Sc. DIALYSIS TECHNOLOGY
B.Sc. PHYSICIAN ASSISTANT
B.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY
B.Sc. RESPIRATORY THERAPY
B.OPTOM
B.O.T
B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGY
B.Sc. CLINICAL NUTRITION
இந்த படிப்புகள், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
B.Pharm, BASLP & B.Optom கல்வித் தகுதி
English as one of the subject
a) Physics, Chemistry, Biology with any other subject
(or)
b) Physics, Chemistry, Botany and Zoology
(or)
c) Physics, Chemistry, Mathematics with any other
subject என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
For All Courses (Except B.Pharm, BASLP & B.Optom)
English as one of the subject
(a) Physics, Chemistry, Biology with any other
subject. (or)
(b) Physics, Chemistry, Botany and Zoology என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட மருத்துவம், பல் மருத்துவம், பாராமெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Website : www.tnhealth.tn.gov.in www.tnmedicalselection.org என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என்று மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு என்று தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். பாராமெடிக்கல் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம். அனைத்து வகை பிரிவுகளுக்கும் பொதுவானது அந்த விண்ணப்பம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் சிற்றேடுகளை ஒருமுறைக்கு இரு முறை படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.