தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
“பதிரிகையாளராக தமது வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக இணைந்து, திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் மிகச் சிறப்பாக திரைப்படத் துறையில் பங்காற்றிய மனோபாலா காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 20 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கி, ஏறத்தாழ 175 திரைப்படங்களில் நடித்துள்ள மனோபாலா மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.