மத்திய அரசு வேலை குறித்த அறிவிப்புகளும் அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும் புதிய வெப்சைட் ஒன்றை அவ்வமைப்பு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் வேலைக்கு செல்ல விரும்புவோர் உடனே, அந்த தளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் வேலைகள் குறித்த விபரங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற இணையத்தளத்தில் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகும். போலீஸ், சுகாதரம், ஆசிரியர் பணி தவிர பெரும்பாலான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் டிஎன்பிஎஸ்சி இணையத்தில் மட்டுமே வரும். அந்த தளத்தின் மூலமே வேலைக்கு விண்ணபிக்க வேண்டும்.
அதுபோல, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப, Staff Selection Commission என்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையத் தளம் உள்ளது. அவ்வமைப்பு, இதுவரை https://ssc.nic.in/ என்ற இணையத்தை அதிகாரப்பூரவமாக கொண்டிருந்தது. தேர்வு அறிவிக்கை, தேர்வு விண்ணப்பம், ஹால் டிக்கெட், தேர்வு முடிவுகள் என்று அனைத்து விதமான தேர்வு நடவடிக்கைகளும் இந்த வெப்சைட் மூலமாகவே விண்ணப்பத்தாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இந்நிலையில், புதிய வெப்சைட் ஒன்றை STAFF SELECTION COMMISSION 19.02.2024 அன்று கொண்டு வந்துள்ளது https://ssc.nic.in/ . ஏற்கனவே, பழைய தளத்தில் தங்களது சுய விபரங்களை பதிவு செய்து இருந்தாலும், இந்த புதிய இணையத்தளத்திலும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்தது செல்லாது. கண்டிப்பாக, புதிய தளத்தில் தங்களது சுய விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளது.
எனவே, மத்திய அரசு வேலைக்கு செல்ல விரும்புவோர் இந்த புதிய தளத்தில் தங்கள் பயோடேட்டா-வை உடனே பதிவு செய்ய வேண்டும்.