பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகலப்பாதைப் பணிகள் முடிவடைந்த போடிநாயக்கனூர் வரை சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.
இந்த ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஜூன் 15 ம் தேதி, இரவு 8.00 மணிக்கு போடிநாயக்கனூரிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ரயில் எண்.20602, மதுரை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ரயில் எண்.06702 தேனி – மதுரை தினசரி முன்பதிவு அல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரல் – போடிநாயக்கனூர் – சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு 3 நாள்கள்) 16-ந் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்தும். 18-ந் தேதி போடிநாயக்கனூரிலிருந்தும் சேவையை தொடங்குகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். சென்னையிலிருந்து இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத மதுரை – போடிநாயக்கனூர் தினசரி ரயில் சேவை 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 8.20-க்கு புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கச்சேகுடா – மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தில் 15-ந் தேதி முதல் நின்று செல்கிறது. கொடைக்கானல் சாலை ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நண்பகல் 12.15 மணிக்கு இந்த ரயில்கள் நின்று செல்லும் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
சு.வெங்கடேசன்ம் எம்.பி.,
இதுகுறித்து, கடந்த 7-ம் தேதி மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில், ‘“அமைச்சரின் தேதிக்காக எவ்வளவு நாள் காத்திருப்பது?” என்று கடந்த ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி போடி – சென்னை ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ், கச்சிகுடா எக்ஸ்பிரஸ் இரண்டும் கொடைரோடு நிலையத்தில் நிறுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும் நன்றி’’ என்று கூறியிருந்தார்.
போடி ரயில் வரலாறு ; 12 ஆண்டு போராட்டம்:
கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மதுரை – போடி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.லாசர் தலை மையில் வர்த்தகர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அடங்கிய போராட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பு மாநாடு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல் வேறு வடிவங்களில் போராட் டம் நடத்தியும் ,பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், ரயில்வே அதிகாரிகளை சந்தித்தும் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக ரயில்வே அமைச்சகம் திட்டத்திற்கு மறு அனுமதி கொடுத்து படிப்படியாக நிதி ஒதுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்ட பணிகள் சுமார் ரூ.560 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற நிலையில் வியாழனன்று ரயில் சேவை மதுரை மற்றும் சென்னை வரை துவங்கப்பட உள்ளது சோதனை ஓட்டம் மதுரை-போடி இடையே அகல ரயில்பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக் கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது. OMS (Oscillation Monitoring System) எனப் படும் சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவி கள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது.
காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்கு புறப் பட்டு சென்றது. ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்ட னர். வியாழக்கிழமை போடி யில் நடைபெறும் நிகழ்ச்சியில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். பபோடி – மதுரை, அகல ரயில் பாதை திட்ட அமலாக்கக்குழு, போடி வர்த்தகர் சங்கம் சார்பில் ரயிலை வரவேற்றும் இத்திட்டத்திற்கு பாடுபட்ட தலைவர்களுக்கு போடி வர்த்தகர் சங்க மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.