Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
பட்டியல் சாதி பழங்குடி மக்கள் மேம்பாடு, துணைத் திட்ட அமலாக்கத்திற்கு வலுவான சிறப்புச் சட்டம் இயற்றுக! - Madras Murasu
spot_img
More
    முகப்புசெய்திகள்பட்டியல் சாதி பழங்குடி மக்கள் மேம்பாடு, துணைத் திட்ட அமலாக்கத்திற்கு வலுவான சிறப்புச் சட்டம் இயற்றுக!

    பட்டியல் சாதி பழங்குடி மக்கள் மேம்பாடு, துணைத் திட்ட அமலாக்கத்திற்கு வலுவான சிறப்புச் சட்டம் இயற்றுக!

    ’’பட்டியல் சாதி பழங்குடி மக்கள் மேம்பாடு, துணைத் திட்ட அமலாக்கத்திற்கு வலுவான சிறப்புச் சட்டம் இயற்றுக'' என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் மேம்பாடு, துணைத் திட்ட அமலாக்கத்திற்கான சிறப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பின்னணியில் அது குறித்த கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் மதுரையில் மே 28 அன்று நடத்தப்பட்டது.

    இக் கூட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் த.செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் எடுத்துரைத்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைப் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன் கூட்டத்திற்கான கருத்துத்தாளை அறிமுகம் செய்தார். அதன் மீது பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதன் விபரம் வருமாறு:

    த.செல்லக்கண்ணு, (த.தீ.ஒ.மு.)

    மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்களுடன் பல கிராமங்க ளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத் தது. பட்டியலின மக்கள் பலர் தங்களுக்கு அரசு கட்டிக் கொடுத்த வீடுகளின் அவலங் களை முறையிட்டனர். வீடுகள் இடிந்து காட்சி அளிக்கின்றன. ஆதி திராவிடர் நலத்துறை அதி காரிகளிடம் பேசினால் எங்களுக்கு மனுக்கள் வரவில்லை என்கிறார்கள். பட்டியலின துணைத் திட்ட நிதியோ பட்ஜெட்டில் பல்லாயி ரம் கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆகவே மக்களுக்கு போய்ச் சேருகிற முறைமை பலப் படுத்தப்பட வேண்டும்.

    சு.க.முருகவேல்ராஜன் முன்னாள் எம்.எல்.ஏ, (மக்கள் விடுதலைக் கட்சி)

    துணைத் திட்டங்கள் பற்றி பட்டியல் சாதி மக்கள் மத்தியில் விழிப்பு தேவைப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே இப் பிரச்சனை பற்றி நான் சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளேன். எஸ்.சி, எஸ்.டி மாணவர் விடுதிகள் மோசமாக இருக்கும். ஆனால் காவல்துறை குதிரைப் படைக்கு ஒதுக்கிய தொகைக்கு கூட நிதி பட்டி யலின துணைத் திட்டங்களில் இருந்து எடுக்கப்படும். இவற்றையெல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளேன். ஆனால் அதற்கு பிறகும் துணைத் திட்ட மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிகாரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கைகளில் வர வேண்டும். சட்டம் வந்தாலும் மீறப் படலாம். கச்சநத்தம் வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டம் இருந்தும் நீதி கிடைக்க என்ன பாடுபட வேண்டி இருந்தது! ஆனாலும் உரிமைகள் குறித்த விழிப்பை சட்டங்கள் ஏற்படுத்தும். ஒரு ரூபாய் செலவிட்டால் 19 பைசாவுக்கு குறை வில்லாமல் நமக்கு வந்து சேர வேண்டும் என்ற உணர்வை பட்டியல் சாதி, பழங்குடி மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

    இன்குலாப் (மாமன்ற உறுப்பினர், விசிக)

    ஒப்பாரி போராட்டங்களை நிறைய நடத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிற நாம் இது போன்ற உரிமைக்கான குரலை ஓங்கி எழுப்ப வேண்டியுள்ளது. ஒரு ரூபாயில் 18 பைசாவுக்கு குறைவில்லாமல் பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பது மட்டுமல்ல, மீத 82 பைசாவிலும் பட்டியலின மக்களுக்குள்ள உரிமை நிலை நாட்டப்பட வேண் டும். நிலம், பஞ்சமி நில மீட்பு, வீடு, வேலை ஆகியன இத்திட்டங்களின் மையமான கோரிக்கைகளாக மாற வேண்டும்.

    கு.ஜக்கையன் (ஆதித் தமிழர் கட்சி)

    தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் முன்முயற்சி பாராட்டத்தக்கது. த.தீ.ஒ.மு வின் எந்த முன்முயற்சியும் இது வரை உரிய தீர்வைத் தராமல் போனதில்லை. மலக்குழி மரணங்களை தடுக்க ஆராய்ச்சி, இயந்திரங்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு பெரும் நிதி தேவைப்படும் என்கிறார்கள். ஏன் பட்டியலின துணைத் திட்ட நிதியை பயன்படுத்தக்கூடாதா? தமிழ்நாட்டில்தான் அதிக மலக்குழி மரணங்கள் நிகழ்கின்றன. சிறப்பு உட்கூறு திட்டங்க ளுக்கு பெயர்கள் மாற்றப்பட்டு வந்துள்ளன. சண்டாளர், பஞ்சமர், ஆதி திராவிடர் என்று பெயர் மாற்றம் பெற்றது மாதிரிதான் இதுவும் உள்ளது. வாழ் நிலையில் மாற்றங்கள் வர வேண்டும். சமத்துவ அளவுகோல்களை எட்ட வேண்டும். விளையாட்டு, பண்பாடு, திரை உல கம் ஆகியனவற்றிலும் சாதிய பாரபட்சங்கள் உள்ளன. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும்.

    எம்.ஊர்க்காவலன் (தேவேந்திரர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பு)

    சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக நீண்ட கால மாக குரல் கொடுத்து வருபவன் நான். பட்டிய லின மக்களின் வாழ்நிலை, வாழிடங்கள் குறித்த வரைபடங்கள் (Mapping) உருவாக்கப்பட வேண்டும். விவசாயம், கால்நடைப் பண்ணை போன்ற அம்சங்களில் கூட்டுறவு முறைமை களை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இன் னும் சாதிய பார்வை மிக அழுத்தமாக அரசி யல் தளத்தில் உள்ளது. இட ஒதுக்கீடு சுழற்சி என்பதெல்லாம் சில நகராட்சிகள், ஊராட்சி களை நோக்கி வருவதே இல்லை. அரசாங்க குழுக்களிலும் சமூக செயல்பாட்டாளர்கள் இடம் பெறுவதில்லை.

    கதிரவன் (விசிக)

    அதிகாரிகள் மத்தியில் சாதிய அணுகு முறை உள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை செயலூக்கம் உள்ளதாக மாற்ற வேண்டி யுள்ளது. அரசு இயந்திரத்தை ஜனநாயகப் படுத்த வேண்டும்.

    பேரறிவாளன் (தமிழ்ப் புலிகள்)

    அவலங்களை நோக்கியே ஓடிப் போக வேண்டிய நிலையில் உள்ள எங்களை ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட வைத்துள்ளீர்கள். பெரியார் பேருந்து நிலை யம் பளபளப்பாக மாற்றப்படுகிறது. ஆனால் பக்கத்தில் உள்ள மேல வாசல் இன்னும் பரி தாபமாக உள்ளது. துப்புரவு தொழிலாளர் நிலைமையைப் பேசினால் கண்களில் வழியும் நீரை கட்டுப்படுத்த இயலாது. தோல் தொழிலில் லாபம் சம்பாதிக்க முடியும் என்றவுடன் மார்வாடிகள் உள்ளே புகுந்து விட்டனர். துணைத் திட்ட நிதியை பயன்படுத்தாதது அரசு தீண்டாமை ஆகும். ஏன் துணைத் திட்டம் மீறப்படுகிறது எனில் அது மனுதர்மத்திற்கு எதிரா னது. பட்டியல் சாதி மக்களுக்கு கல்வி, வேலை, வருமானம் என்றால் எப்படிப் பிடிக்கும் மனு தர்மத்திற்கு?

    வேல்முருகன் (தியாகி இம்மானுவேல் பேரவை)

    பட்டியல் சாதி, பழங்குடி துணைத் திட்ட நிதி தவறாக பயன்படுத்துவது காலாகாலமாக அரங்கேறி வருகிறது. பொதுத் திட்டங்களுக்கு மடை மாற்றம் ஆவதும் நடந்து வருகிறது. இதனை தடுக்க உறுதியான பிரிவுகள் சட்டத்தில் வேண்டும்.

    பி.வரதராசன் (பெரியார் தொண்டர்)

    ஒடுக்கப்பட்டவர்களின் வலியை அம்மக் கள் உணர்கிற அளவுக்கு பிறர் உணர முடியாது என்றார் பெரியார். பக்தி இலக்கியம் சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்த வரலாறு கொண்டது. ஆனால் இன்று சைவ மடாதி பதிகள் எங்கே போய் நிற்கிறார்கள் பாருங்கள். திருவாரூர் தெருவுக்கு கலைஞர் பெயரை வைக்க விடாமல் கூச்சல் இட்டு தடுக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் நாம் எதிர்வினை ஆற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ் நிலை மேம்பாட்டிற்கான போராட்டம், சிறப்புச் சட்டம் கோரும் போராட்டம் சமூக தளத்தின் எதிர் வினைகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

    வழக்கறிஞர் செல்வகோமதி (சோக்கோ அறக்கட்டளை)

    துணைத் திட்டம் என்ற பெயரே அதன் முக்கியத்துவத்தை குறைப்பதாக உள்ளது. உரிமை சார்ந்த பெயர் இடப்பட வேண்டும். முகவுரையில் உலக மனித உரிமை சாசன நெறிகள், அரசியல் சாசன விழுமியங்கள் இணைக்கப்பட வேண்டும். பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் குடியிருப்புகள் வாழ்வ தற்கே தகுதி அற்றதாக உள்ளன. மாத விலக்கு காலங்களில் நாப்கினை மாற்றக் கூடிய சூழல் கூட இல்லங்களில் இருப்ப தில்லை. மாவட்ட ஆட்சியர் பங்களாக்கள் பல ஏக்கர் பரப்பளவில் அமைகின்றன. மாறிய பாலினம், தனிப் பெண்கள், பெண் தலைமை குடும்பங்கள் என கூர் கவனத்தை இத்திட்டங்கள் செலுத்த வேண்டும்.

    அருட்தந்தை பிலோமின் ராஜ்

    இந்திய நாட்டின் அரசியல் சாசனம் முறை யாக அமலானாலே இது போன்ற சிறப்பு சட்டங்கள் தேவைப்பட்டு இருக்காது. அரசி யல் சாசனத்தின் வழி காட்டு நெறிகள் சட்டப் பூர்வமானதாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும். பட்டியல் சாதி, பழங்குடி மக்க ளுக்கு அவர்களைப் பாதுகாக்கிற சட்டங்கள் பற்றியும், தேவைப்படும் சட்டங்கள் பற்றியும் விழிப்பு தேவைப்படுகிறது. நாகப்பட்டினம் சுனாமியின் போது மக்களுக்கு அரசு அளித் துள்ள திட்டங்களை சிறு பிரசுரமாக ஆயிரக் கணக்கில் தயாரித்து சுற்றுக்கு விட்டோம். மக்கள் அதிகாரிகளை முற்றுகை இட்டு விட்டனர். ஆகவே மக்களுக்கான பரப்புரை அவசி யம்.

    கே.சாமுவேல்ராஜ் (த.தீ.ஒ.மு. பொதுச் செயலாளர்)

    ஒரு சட்டம் எழுத்தில் மட்டும் உயிர் பெறுவதில்லை. உணர்ச்சி முக்கியம். அத்தகைய உணர்ச்சி இந்த கூட்டத்தில் வெளிப்பட்டது. காலங்காலமாக ஒடுக்கப்படும் மக்களுக்கு நீதி கேட்கிற குரல்கள் வலிமையாக எழும்ப வேண்டியுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதற்கான ஒருங்கிணைப்பைச் செய்தா லும் இந்த கலந்தாய்வுக் கூட்டங்களின் விளை பொருள் இதில் பங்கேற்கிற அனைத்து அமைப்புகளுக்கும் சொந்தம். அத்தகைய ஒருமித்த கருத்தையே எல்லா அமைப்புகள் சார்பிலும் அரசுக்கு கொண்டு செல்வோம். மதுரை துவக்கமே. அடுத்து சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட மையங்களிலும் இத்தகைய கலந்தாய்வு நடைபெற வுள்ளது.

    இவ்வாறு பேசினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் உ.நிர்மலா ராணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலை வர்கள் மா.பாலசுப்ரமணியன், ஆர்.சசிகலா, செ.ஆஞ்சி, செ.முத்துராணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments