தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள், 2 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கு , தகுதி வாய்ந்த டிப்ளமோ படிப்பு முடித்த விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து 4 ஆண்டுகள் பகுதி நேர பி இ பட்டப்படிப்பிற்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கி இருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ptbe-tnea.com/ என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தகுதி: விண்ணப்பத்தாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அன்று டிப்ளமோ படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தாரர் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தவராகவோ அல்லது 2 ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ இருக்க வேண்டும்.
பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு, நெட் பாங்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்.
முக்கிய நாட்கள்: ஆரம்ப நாள் 28.06.2023 இறுதி நாள்: 23.07.2023
இணையதள வசதி இல்லாத விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கல்வி ஆண்டின் 4 ஆண்டு பகுதி நேர பி இ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக மட்டுமே நடக்கும்.
குறிப்பு: இந்த கல்வி ஆண்டு முதல் பகுதி நேர பி இ பட்டப்படிப்பு நான்கு ஆண்டுகளாக (8 பருவங்கள்) மாற்றப்பட்டுள்ளது.
மேலும் விபரங்கள் அறிய https://www.ptbe-tnea.com/ என்ற இணையைதளத்தை பார்வையிடலாம்.
படிப்புகள் & கல்லூரிகள்:
Civil Engineering
2005 – Government College of Technology, Coimbatore – 641 013.
2007 – Coimbatore Institute of Technology, Coimbatore – 641 014.
2615 – Government College of Engineering, Salem – 636 011.
4974 – Government College of Engineering, Tirunelveli – 627 007.
5008 – Thiagarajar College of Engineering, Madurai – 625 015.
5901 – Alagappa Chettiar Government College of Engineering and Technology, Karaikudi – 630 004.
Mechanical Engineering
1516 – Thanthai Periyar Government Institute of Technology, Vellore – 632 002.

Electronics and Communication Engineering
1516 – Thanthai Periyar Government Institute of Technology, Vellore – 632 002.
2005 – Government College of Technology, Coimbatore – 641 013.
2615 – Government College of Engineering, Salem – 636 011.
4974 – Government College of Engineering, Tirunelveli – 627 007.
5901 – Alagappa Chettiar Government College of Engineering and Technology, Karaikudi – 630 004.
Computer Science Engineering
4974 – Government College of Engineering, Tirunelveli – 627 007.
தொடர்பு எண்:
The Secretary, Part Time B.E. Admissions 2023-2024, Coimbatore Institute of Technology, Civil Aerodrome (PO), Coimbatore – 641 014. Email coordinatorptbe@cit.edu.in Mobile 94869 77757 Land Line +91 – 422 – 2590080 Fax +91 – 422 – 2575020