தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு / பி.எஸ்.சி., பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கு ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்பு கல்லூரிகள்/ அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnlea.com www.accet.co.in www.accetedu.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இனையதளத்திலேயே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவுக் கட்ட்ணம்: எஸ்சி, எஸ்சி அருந்ததியர், எஸ்டி பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ.300.
கலந்தாய்வு: இந்த ஆண்டு கலந்தாய்வு இணையவழியில் நடைபெறும்.
தொடர்பு எண்கள்; 04565 230801 04565 224528
மேலும், தகவல் சிற்றேடு உள்ளிட்ட கல்லூரி விபரங்களை அறிய www.tnlea.com www.accet.co.in www.accetedu.in இணையதளத்தின் உள் சென்று பார்க்கவும். https://www.tnlea.com/lea/registration/application/

