தமிழ்நாடு அரசில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள 1933 காலிப் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்படப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் ஆகியவற்றில் காலியாக உள்ள 1,933 காலிப் பணி இடங்களில் போட்டித்தேர்வு மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஆன்லைன் விண்ணப்பம்!
இந்த காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.tnmaws.ucanapply.com என்ற இணைய தளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பின் மூலம், உதவிப் பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகரமைப்பு ஆய்வாளர், பணி ஆய்வாளர், துப்புறவு ஆய்வாளர் ஆகிய காலிப் பணி இடங்கள் நிரப்பட உள்ளன.
மொத்த பணியிடங்கள் : 1933
உதவி பொறியாளர் (மாநகராட்சி) : 146
உதவி பொறியாளர் (சிவில்/மெக்கானிக்கல்) : 145
உதவி பொறியாளர் (நகராட்சி) : 80
உதவி பொறியாளர் (சிவில்) : 58
உதவி பொறியாளர் (மெக்கானிக்கல்) : 14
உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) : 71
உதவி பொறியாளர் (திட்டம்- மாநகராட்சி) : 156
உதவி பொறியாளர் (திட்டம் – நகராட்சி) : 12
இளநிலை பொறியாளர் : 24
தொழில்நுட்ப உதவியாளர் : 257
வரைவாளர் (மாநகராட்சி) : 35
வரைவாளர் (நகராட்சி) : 130
பணிமேற்பார்வையாளர் : 92
நகர ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) : 367
துப்புறவு ஆய்வாளர் (மாநகராட்சி, நகராட்சி) : 244
எழுத்துத் தேர்வுகள்!
இந்த வேலைக்கான எழுத்துத் தேர்வுகள் ஜூன், 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்புகள் வரை கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உடையோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு வேலையில் சேரலாம்.