Home கல்வி கல்லூரிகள் “தோல்விதான் வெற்றியின் தாய்..!” வழிகாட்டும் சீமான்

“தோல்விதான் வெற்றியின் தாய்..!” வழிகாட்டும் சீமான்

0
“தோல்விதான் வெற்றியின் தாய்..!” வழிகாட்டும்  சீமான்

“தோல்விதான் வெற்றியின் தாய்” என்று 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவர்களுக்கு அடுத்த கட்டம் செல்ல வேண்டியது குறித்து நம்பிக்கையை விதைத்துள்ளார் சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருஙகிணைப்பாளர் சீமான் அறிக்கை:

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகளும் சிறிதும் மனந்தளர வேண்டாம்!

தோல்விதான் வெற்றியின் தாய்!

தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி!

இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம்,
நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை!

தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காத வரை!

உலகில் வெற்றியின் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் அனைவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள்தான்!

ஆகவே, என் அருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சியுங்கள். உறுதியாக வெற்றிபெறுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here