Home அறிந்துகொள்வோம் “தொல்லியல் கருத்தரங்கமும் மரபுப்பயணமும்..!” கள்ளக்குறிச்சி வரலாறு பேசப்படுகிறது

“தொல்லியல் கருத்தரங்கமும் மரபுப்பயணமும்..!” கள்ளக்குறிச்சி வரலாறு பேசப்படுகிறது

0
“தொல்லியல் கருத்தரங்கமும் மரபுப்பயணமும்..!” கள்ளக்குறிச்சி வரலாறு பேசப்படுகிறது

இந்துசமய அறநிலையத்துறை – விழுப்புரம் மண்டலம் , விழுப்புரம் வரலாற்று ஆய்வு மையம், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை (23.07.2023) நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. சி.பி.எஸ்.சி பள்ளி வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றுத் தொல்லியல் கருத்தரங்கம் என்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தொடர்புடை பல்வேறு தலைப்புகளில் ஆய்வாளர்கள், அறிஞர்கள் பேசுகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொன்மை, பண்பாடு, கலாச்சாரம், சுற்றுச்சூழல், மக்கள் போக்கு என்று பல முக்கிய வரலாற்று தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மட்டும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பும் உள்ளவர்கள் இணைப்பில் கண்டுள்ள கூகுள் படிவத்தில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSelQnZk7NJQpKPq3vK1bF51_hZ2dbP6CsI8odYcvr_hFWm70g/viewform?usp=pp_url

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here