இந்திய ரயில்வே துறையில் காலியாகும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது, தெற்கு ரெயில்வேயில் காலியாக உள்ள 2,860 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ல் -1357 பணியிடங்கள், கோல்டன் ராக் மத்திய பணிமனையில் – 679, சிக்னல் அண்டு டெலிகாம் பணிமனையில் 824 இடங்கள் என்று மொத்தம் 2,860 பணியிடங்கள் மண்டல வாரியாக நிரப்பபடுகின்றன. ஃபிட்டர், டர்னர், வெல்டர், வெல்டர் (ஜி & இ), மெஷினிஸ்ட், எலக்ட்ரீஷியன், பெயிண்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், கார்பெண்டர், வயர்மேன், பிளம்பர், டீசல் மெக்கானிக், COPA உள்ளிட்ட பணிகளில் அப்ரெண்டீஸ் டிரெயினிங் அளிக்கப்படும்.
10 ஆம் வகுப்பு, துறை சார்ந்த பிரிவில் ஐ.டி.ஐ ஆகிய படிப்புகளை படித்து இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர் வயது 15 முதல் 24 க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை அப்ரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது ஊக்கத்தொகை தரப்படும். விண்ணப்பிக்க வரும் 28.02.2024 கடைசி நாளாகும். www.sr.indianrailways.gov.in/ என்ற இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக உடனே விண்ணப்பிக்கலாம்.