தங்கப் பத்திரங்களுக்கான மத்திய அரசின் அறிவிக்கை 2023, ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயிக்கப்பட்டது.
தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்த முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ. 5,876-ஆக இருக்கும்.