“டெல்லிக்கான தீர்ப்பு மட்டுமல்ல இது..!”

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் உயர்த்திப் பிடிப்பதாக அமைந்துள்ளது

0
191

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு களின் கையில்தான் உண்மையான நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

டெல்லி யூனியன் பிரதேச நிர்வாகம் குறித்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தபோதும் ஒன்றிய- மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்ச்சைகளிலும் ஒரு தெளிவை இந்த தீர்ப்பு தருகிறது. மேலும் ஆளுநர்களின் போக்கிற்கு எதிரானதாகவும் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது எனலாம்.

டெல்லி மாநில அரசுக்கும் ஒன்றிய அர சுக்கும் இடையில் தொடர்ந்து சர்ச்சை இருந்து வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை விட, துணை நிலை  ஆளுநரின் அதிகாரம் அதிகம் என்ற போக்கு உள்ளது.

டெல்லி நிர்வாகம் தொடர்பாக ஒன்றிய அரசு சில சட்டத் திருத்தங்கள் செய்தது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் 2019 -ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு- க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதான தீர்ப்பை இப்போது வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமை யிலான இந்த அமர்வு, “ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை ஆகும். யூனியன் பிரதே சமான தில்லி அரசு நிர்வாகம் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது” என தெளிவாகக் கூறியுள்ளது.

“மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அர சுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் இல்லை என்பது ஏற்கத்தக்கது அல்ல” என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

“மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே தில்லி சட்டமன்றம் தேர்தல் மூலம் தேர்வு செய்யப் பட்டது. அந்த சட்டமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என நீதிபதி கள் கூறியுள்ளனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் உயர்த்திப் பிடிப்பதாக அமைந்துள்ளது என்று சட்ட வல்லுநர்களும் அரசியல்.விமர்சகர்களுன் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்