ஜி20, எஸ்சிஒ அல்லது ஜி7 என எந்த உலகளாவிய கூட்டமைப்பும், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையைத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.
ஜனநாயகத்துக்கு உட்பட்டு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மோடி எவ்வாறு செயல்படுத்துகிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் டிஜிட்டல் இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் ஆழமான தொலைநோக்குப் பார்வையை ஏற்றுக்கொள்வதாக ஜப்பான் அமைச்சர் கூறியிருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் இணைய விரும்புவதாக ஜப்பான் டிஜிட்டல் பரிமாற்றத் துறை அமைச்சர் கோனோ தாரோ தெரிவித்து இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பான் அமைச்சர் கோனோ தாரோ இன்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜி7 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தை கடந்த மாதம் நடத்தியதாகவும், அக்கூட்டத்தில் இந்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டதாகவும், அதன் அடிப்படையில் ஜப்பானும், இந்தியாவும் டிஜிட்டல் ஒத்துழைப்பை முன்னிறுத்தவுள்ளதாகவும், இந்தியாவின் யுபிஐ பணப்பரிமாற்ற முறையில் இணைவது குறித்து தீவிர பரிசீ்லனை மேற்கொண்டு இருப்பதாகவும் கூறினார்