2023 ஏப்ரல் மாதத்தில், மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹ 1,87,035 கோடியாகும். இதில் சி.ஜி.எஸ்.டி ₹ 38,440 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ₹ 47,412 கோடி, ஐ.ஜி.எஸ்.டி ₹ 89,158 கோடி (செஸ் ₹ 34,972 கோடி உட்பட).
ஐ.ஜி.எஸ்.டி-யில் இருந்து சி.ஜி.எஸ்.டி-க்கு ₹45,864 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-க்கு ₹37,959 கோடியும் அரசு செட்டில் செய்துள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஏப்ரல் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சி.ஜி.எஸ்.டி-க்கு ₹84,304 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-க்கு ₹85,371 கோடியும் ஆகும்.
ஏப்ரல் 2023-க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாயை விட 12% அதிகமாகும்.
முதல் முறையாக மொத்த ஜி.எஸ்.டி வசூல் ₹1.75 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 2023 ஏப்ரல் 20-ந்தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 68,228 கோடி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு (இதே தேதியில்) அதிகபட்ச ஒற்றை நாள் கட்டணம் 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ₹ 57,846 கோடியாக இருந்தது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,559 கோடி ஜி.எஸ்.டி வரி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 19 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரியில், ரூ.218 கோடி வசூலாகி இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட 6 சதவீதம் அதிக வசூலாகும்.