சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை சென்னைக்கு புறப்பட்டார்.
டோக்கியோ விமான நிலையத்தில் ஜப்பான் நாட்டிற்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் வழியனுப்பி வைத்தார். இன்றுவு இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். முதலமைச்சரவை வரவேற்ற திமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.