சென்னை தாம்பரம் காவல் இணை ஆணையராக பணிபுரியும் முனைவர். பா.மூர்த்தி ஐ.பி.எஸ்., அவர்கள், தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் தன்னுடைய சொந்த வீட்டை மாணவர்களும், இளைஞர்களும் படித்து பயன் பெற #பாலாபடிப்பகம் என்றதொரு வாசிப்பு சாலையை உருவாக்கியிருக்கிறார்.
இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கத் தேவையான நூல்கள், சிறு பிள்ளைகள் வாசிக்க குழந்தைப் புத்தகங்கள், பெரியவர்கள் வாசிக்க பொது நூல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
தமக்குக் கிடைத்திடாத கல்விச் செல்வத்தை யாவர்க்கும் அளிப்பதை தம் சிந்தையில் நிறுத்தி நின்ற தனது தந்தை பால்சாமி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமான 17.09.2023 அன்று #பாலாபடிப்பகம் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
உள்ளூர் மாணவர்கள் தம் வீட்டுப்பாடங்களை படிக்க உதவும் வகையில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரே நூலகராகவும் செயல்படுவார்.
திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரையும், சனி-ஞாயிற்று கிழமைகளில் கூடுதலாக காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் #பாலாபடிப்பகம் இயங்குகிறது.
பாலா படிப்பகத்திற்கு புத்தகங்களை வழங்க விருப்புவோர் இந்த முகவரிக்கு அனுப்பலாம்.
முகவரி:
பாலா படிப்பகம், தெற்குத் தெரு, வக்கம்பட்டி,
நி. பஞ்சம்பட்டி அஞ்சல்,
திண்டுக்கல் -624 303
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த Empower Sankar சார் அவர்களின் மணி விழாவிற்கு வந்திருந்த டாக்டர். பா. மூர்த்தி ஐ.பி.எஸ்., சார் அவர்களை நேரில் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. காவல்துறையின் உயர் அதிகாரி என்ற தோரணை இல்லாமல் மிக எளிமையாக பேசினார்கள்.
எங்களைப் போன்ற இளைஞர்கள் நல்வழியில் நடக்க உங்களைப் போன்றவர்களின் நேர்மை தான் Inspiration Sir!!
வாழ்த்துக்கள் Moorthy DrPa சார்💐
–ஆ.கோமதிநாயகம் விசு