Home Uncategorized சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 16,17 & 18 தேதிகளில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2024

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 16,17 & 18 தேதிகளில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2024

0
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 16,17 & 18 தேதிகளில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2024

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16,17 மற்றும் 18 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. 

தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை பிற மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்வதற்கு தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்பு மானியம் வழங்குகிறது.

அது போலவே பிற மொழி இலக்கியங்களை தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்வதற்கும் பல நாடுகள் மொழிபெயர்ப்பு மானியங்களை வழங்குகிறது.

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் கிடைத்த தொடர்புகளின் வாயிலாக பிறமொழிகளின் மொழிபெயர்ப்பு மானியம் தமிழ் பதிப்பாளர்களுக்கு கிடைக்கத் தொடங்கி உள்ளது.

இது தமிழ் பதிப்புத் துறையில் புதிய பாதைகளைத் திறக்கிறது. இப்புத்திலக்கியங்களின் சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது!

சென்ற ஆண்டு நாம் வகுத்த இலக்குகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம்.

அடுத்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் அச்சாதனையைப் பன்மடங்கு ஆக்கிடப் பதிப்பாளர்களின் ஒத்துழைப்பை விழைகிறோம்.

இப்பொருள் தொடர்பான கூட்டம் 09.11.2023, வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

பதிப்பு துறை சார்ந்த அனைவரும் தவறாது கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இத்தகவலை பொது நூலக இயக்ககம் இயக்குநர் க.இளம்பகவத் (பன்னாட்டு புத்தகக் காட்சி குழு 2024) வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here