Home செய்திகள் சென்னை தொலைக்காட்சியின் “ஒளிரும் புன்னகை – ஜர்தோசி கலையும் கலைஞர்களும்” என்ற ஆவணப்படம் சர்வதேச விருது பெற்றது

சென்னை தொலைக்காட்சியின் “ஒளிரும் புன்னகை – ஜர்தோசி கலையும் கலைஞர்களும்” என்ற ஆவணப்படம் சர்வதேச விருது பெற்றது

0
சென்னை தொலைக்காட்சியின் “ஒளிரும் புன்னகை – ஜர்தோசி கலையும் கலைஞர்களும்” என்ற ஆவணப்படம் சர்வதேச விருது  பெற்றது

பொருளாதார மீட்டுருவாக்கம் பற்றிய சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான 2023-ஆம் ஆண்டுக்கான சர்வதேச நடுவர் விருது, ஜர்தோசி இழை பூத்தையல் கலை பற்றி பொதிகை தொலைக்காட்சி நிலையம் தயாரித்து ஒளிபரப்பிய “ஒளிரும் புன்னகை – ஜர்தோசி கலையும் கலைஞர்களும்” என்ற ஆவணப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மலேசியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் Asia pacific Institute for Broadcasting Development என்ற நிறுவனம் 23.05.2023 அன்று இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய ஊடக உச்சி மாநாட்டில் இந்த சர்வதேச விருதினை வழங்கியது. ஜர்தோசி பூத்தையல் கலையானது ஆசிய பகுதிக்கே உரித்தான கலையாகும்.

துருக்கி நாட்டில் உருவான இந்த கலை பல ஆசிய நாடுகளுக்கு பயணித்து, இந்தியாவை வந்தடைந்தது. இந்த ஆவணப்படம் ஜர்தோசி கலையின் வரலாறு, வளர்ச்சி, கைவினை கலைஞர்களின் திறமை, இந்த கலையின் இன்றைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்த கருத்துகளை முன்வைத்திருக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இருக்கும் சிறிய ஜர்தோசி மையத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here