முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2022-23ஆம் ஆண்டுக்கான சட்டமன்றப் பேரவை விதி எண்-110ன் கீழ் அறிவித்த அறிவிப்பில் “அண்ணல் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் செம்பதிப்பாக வெளியிடுதல்” என்ற திட்டத்தை அறிவித்து இருந்தார்.
இத்திட்டப்பணியை மேற்கொள்ள திட்ட மேற்பார்வையாளர் மாதம் தொகுப்பூதியம், ரூ. 40,000/-, திட்ட உதவியாளர், மாதம் தொகுப்பூதியம்
ரூ. 22,000/- மற்றும் அலுவலக உதவியாளர், மாதம் தொகுப்பூதியம் ரூ. 15,000/- ஆகியப் பணியிடங்களில் தற்காலிகமாகப் பணியாளர்கள் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்யப்பட உள்ளனர்.
.இப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட ஒளிப்படிகளுடன் இணைத்து வரும் 30.05.2023 பிற்பகல் 5.30 மணிக்குள் இயக்குநர் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சலிலோ அனுப்பக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், விண்ணப்பம் மற்றும் தகுதிகள் குறித்த விவரங்களை www.ulakaththamizh.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

