Home செய்திகள் ’’செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்தது..!’’ காவேரி மருத்துமனை தகவல்

’’செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்தது..!’’ காவேரி மருத்துமனை தகவல்

0
’’செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்தது..!’’ காவேரி மருத்துமனை தகவல்

அறுவை சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை காலை 10.15 மணியளவில் நிறைவடைந்தது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி மூன்று நாட்களுக்கு ஐசியூ-வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும், பிறகு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ’’அறுவை கிச்சை வெற்றிகரமாக நடந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்கிறார்’’ என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here