2024-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகளுக்கான இணையவழி பரிந்துரைகள் 2024-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கு பரிந்துரைப்பதற்கான கடைசி தேதி 2023 செப்டம்பர் 15-ம் தேதியாகும். பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை ராஷ்ட்ரிய புரஸ்கார் தளத்தில் (https://awards.gov.in) அளிக்கலாம்.
பத்ம விருதுகள், அதாவது பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகியவை நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும். 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்த மற்றும் விதிவிலக்கான சாதனைகள் / சேவைகளுக்காக வழங்கப்படும் இந்த விருது ‘வித்தியாசமான பணியை’ அங்கீகரிக்கிறது. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் அந்த இணையதளத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும்.