குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வு கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல வனத்துறைக்கு (Indian Forest Service) தேர்வானவர்கள் பெயர் பட்டியலும் வெளியாகி இருக்கிறது.
தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.
இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in-ல் வெளியிடப்படும்.
தேர்வர்கள், தங்களுக்கானத் தகவல்கள், தெளிவுகள் ஆகியவற்றை புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக்கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.upsc.gov.in/
மொத்தம் 1,105 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் பலலட்சம் பேர் எழுதினார்கள். அதில், முதல் நிலைத்தேர்வில் பங்கேற்றவர்களில் 14,624 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களது விபரம் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
குடிமைப் பணி விபரம்:
(i) Indian Administrative Service
(ii) Indian Foreign Service
(iii) Indian Police Service
(iv) Indian Audit and Accounts Service, Group ‘A’
(v) Indian Civil Accounts Service, Group ‘A’
(vi) Indian Corporate Law Service, Group ‘A’
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’
(viii) Indian Defence Estates Service, Group ‘A’
(ix) Indian Information Service, Group ‘A’
(x) Indian Postal Service, Group ‘A’
(xi) Indian P&T Accounts and Finance Service, Group ‘A’
(xii) Indian Railway Protection Force Service, Group ‘A’
(xiii) Indian Revenue Service (Customs & Indirect Taxes) Group ‘A’
(xiv) Indian Revenue Service (Income Tax) Group ‘A’
(xv) Indian Trade Service, Group ‘A’ (Grade III)
(xvi) Indian Railway Management Service, Group ‘A’
(xvii) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
(xviii) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service (DANICS), Group ‘B’
(xix) Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service (DANIPS), Group ‘B’
(xx) Pondicherry Civil Service (PONDICS), Group ‘B’
(xxi) Pondicherry Police Service (PONDIPS), Group ‘B’
வனத்துறை: வனப்பணி: (IFS)
குடிமைப் பணிக்கும் வனத்துறைக்கும் பொதுவானதுதான் இந்த முதல் நிலைத்தேர்வு. இதில், விண்ணப்பத்தாரர்கள் விருப்பம் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் வனத்துறை முதன்மைத் தேர்வுக்கு (மெயின்) 1,958 பேர் தேர்வாகி இருக்கிறார்கள். இந்திய வனத்துறை அதிகாரி (Indian Forest Service) பணிக்கு 150 பேர் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். வனத்துறை முதன்மைத் தேர்வு, அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடைபெறும். வனத்துறை அதிகாரி இறுதி பட்டியல் வெளியாகும்.