Home கல்வி “கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கை அறிவிப்பு – ஜூன் 30 கடைசி நாள்..!”

“கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கை அறிவிப்பு – ஜூன் 30 கடைசி நாள்..!”

0
“கால்நடை மருத்துவ படிப்பு சேர்க்கை அறிவிப்பு – ஜூன் 30 கடைசி நாள்..!”

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2023-2024-ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவர் (இளநிலை) படிப்புக்கான அறிவிப்பு வெளியாகி விட்டது.

ஜுன் 12 ம் தேதி முதல் ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பில் பயாலஜி குருப் எடுத்து படித்தவர்கள் இப்படிப்பில் சேரமுடியும்.  குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். நீட் தேவையில்லை.

கால்நடை மருத்துவம் & கால்நடை பராமரிப்பு படிப்பு (BVSc & AH), BTech – உணவு தொழில் நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் உள்ளன.

இந்த இளநிலை படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

தமிழ்நாட்டு மாணவர், அயல்நாட்டு வாழ் இந்தியர், அயல்நாட்டு வாழ் இந்தியர் குழந்தைகள், அயல்நாட்டு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல் நாட்டினர் என்ற வகைகளில் மாணவர்- மாணவியர் சேர்க்கை நடைபெறும்.

www.tanuvas.ac.in என்ற் இணையத்தில் கூடுதல் தகவல் கிடைக்கும். இந்த் இணையத்தில் தான் விண்ணப்பிக்க் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here