காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரும் திமுக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான படப்பை ஆ.மனோகரன் – குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் ஆகியோர் மகன் ம.வெற்றிசெல்வனுக்கும் சென்னை கலைஞர் கருணாநிதி நகர் எச்.ஜோஷ்வா ஐசக் (சிபிசிஎல் தரக்கட்டுப்பாட்டு மேலாளர் – ஒய்வு) – கிரேஸ்லின் ஐசக் (சைதை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணித ஆசியர் – ஓய்வு) ஆகியோரின் மகள் ஜோ.ஜெசிக்கா ஏஞ்சலினுக்கும் ஜுலை 19 – ஆம் தேதி பல்லாவரம் ரேடியல் சாலை நியூ லைப் செலிபிரேசன் சென்டரில் திருமணம் நடைபெற்றது.

குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். திமுக நிர்வாகிகள் குன்றத்தூர் பகுதி மக்கள் திரளாக வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், மணக்களின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி 23.7.2023 ஞாயிறுக்கிழமை சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

’’திமுக தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன் இளைஞரணி செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளுடன், குறு சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் ஜுலை 23 – ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நடைபெறும் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சியில் தாங்கள், தங்கள் சுற்றம் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்த வருகை தர வேண்டும்’’ என்று காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவரும் திமுக குன்றத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளருமான படப்பை ஆ.மனோகரன் அழைப்பு விடுத்துள்ளார்.


