Indian Coast Guard என்கிற இந்திய கடலோர காவல் படையில் நேவிக் ஜெனரல் டியூட்டி பிரிவில் 260 பணி இடங்களை நிரப்ப்புவதற்கான ஆள்தேர்வில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கடலோர காவல் படையின் ஆள்சேர்ப்பு துறை அறிவித்துள்ளது.
நாட்டின் கடலோர பாதுகாப்பு பணியில் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே இந்திய கடலோர காவல் படை ஒருங்கிணைந்து சேவையாற்றி வருகிறது. அத்தகைய கடலோர காவல் படைக்கு 12 -ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தை முக்கிய பாடமாக எடுத்து பாஸ் ஆகி இருக்கும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரரின் வயது, 18 ல் இருந்து 22 க்குள் இருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்சபட்ச வயது வரம்பி மூன்று ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கொள்குறி வகையிலான எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
இந்திய கடலோர காவல் படை தேர்வு பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்ள அதன் வேலைவாய்ப்பு விளம்பரம் முழுமையாக இங்கே Indian-Coast-Guard-Navik-Notification
எழுத்து தேர்வானது, இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத் தேர்வில் Maths பிரிவில் 20 கேள்விகள், Science பிரிவில் 10 கேள்விகள், English பிரிவில் 15 கேள்விகள், Reasoning பிரிவில் 10 கேள்விகள், General Knowledge பிரிவில் 5 கேள்விகள் என்று மொத்தம் 60 கேள்விகள் கேட்க்கப்படும். இந்தக் கேள்விகள் அனைத்தும் 10 ஆம் வகுப்பு தரத்தில் இருக்கும்.
இரண்டாம் கட்டத் தேர்வில், Maths பிரிவில் 25 கேள்விகளும் Physics பிரிவில் 25 கேள்விகளும் என்று மொத்தம் 50 கேள்விகள் கேட்க்கப்படும். இந்த கேள்விகள் அனைத்தும் 12 ஆம் வகுப்பு தரத்தில் இருக்கும்.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், உடல் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அதன்பின்னர், மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர், பணி நியமனை ஆணை வழங்கப்படும்.
இந்திய கடலோர காவல் படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற விரும்பும் துடிப்பு மிக்க இளைஞர்கள், பிப்ரவரி 13 ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வரை https://joinindiancoastguard.cdac.in/cgept/ என்ற இணையத்தளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.