மின் கட்டணம் செலுத்துவதற்கான மையம் அருகாமையிலேயே வேண்டுமென்ற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி நடுக்குப்பம் பகுதியினரின் கோரிக்கையை ஏற்று, திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் கணினி வசூல் மையம் & மின் தடை நீக்க பிரிவு அமைக்கப்பட்டது. அந்த மையத்தின் சேவையை இன்று தொடங்கி வைத்தோம். அப்போது பொதுமக்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறன், திமுக மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு எம்.சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
“ஐஸ்ஹவுஸ் பகுதியில் மின் கட்டணம் செலுத்தும் மையம்..!” தொகுதி மக்கள் கோரிக்கை ஏற்பு
தனது தொகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் செலுத்தும் மையத்தை அவர்கள் அருகாமையிலேயே இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
RELATED ARTICLES