Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6114
’’எம்.எட்., மாணவர் சேர்க்கை – செப் 30 கடைசி நாள் ..!” கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு - Madras Murasu
spot_img
More
    முகப்புகல்விகல்லூரிகள்’’எம்.எட்., மாணவர் சேர்க்கை - செப் 30 கடைசி நாள் ..!'' கல்லூரிக் கல்வி இயக்ககம்...

    ’’எம்.எட்., மாணவர் சேர்க்கை – செப் 30 கடைசி நாள் ..!” கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

    ”தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பு – எம்.எட்., (Master of Education – M.Ed.) மாணாக்கர் சேர்க்கை – 2023-2024 அறிவிப்பினை கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க 30.09.2023 அன்று கடைசி நாள் ஆகும்.

    தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
    விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல்லூரிக்கும், விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/. (ரூபாய் அறுபது மட்டும்) செலுத்தவேண்டும். SC/SCA/ ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத்தினால் போதுமானது.

    மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்படும்.

    விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.

    இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “ The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 25.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
    மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

    இணையதள வாயிலாக விண்ணப்ப பதிவு துவங்கும் நாள் – 25.09.2023
    இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் – 30.09.2023

    தொடர்பு எண் : 93634 – 62070, 93634 – 62007, 93634 – 62042, 93634 – 62024

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments