அறிவியல் நகரம் 2018-2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் “ஊரக கண்டுபிடிப்பாளர் விருது”-னை வழங்கி வருகிறது. இவ்விருது ஊரக புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ. 1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)-க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
2022-2023 ஆம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவியல் நகரத்திற்கு 30/08/2023 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அறிவியல் நகரம் துணைத்தலைவர் அறிவித்துள்ளார்.