Home செய்திகள் “இலவசமாகப் பயணிக்கலாமா..? குழப்பத்தில் விடியல் பயணம்.. ! எழுத்தாளர் ராம் தங்கம்

“இலவசமாகப் பயணிக்கலாமா..? குழப்பத்தில் விடியல் பயணம்.. ! எழுத்தாளர் ராம் தங்கம்

0
“இலவசமாகப் பயணிக்கலாமா..? குழப்பத்தில் விடியல் பயணம்.. !  எழுத்தாளர் ராம் தங்கம்
தவெக ஆட்சி அமைந்த பிறகு, பேருந்துகளில் அந்தப் பெயர்ப்பலகை காணப்படுவதில்லை. இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், “இந்தப் பேருந்தில் ஏறினால் டிக்கெட் எடுக்க வேண்டுமா? அல்லது முன்பு போல இலவசமாகப் பயணிக்கலாமா?” என்ற கேள்வியுடனும், தடுமாற்றத்துடனும் பதற்றமடைகிறார்கள்.
‘’தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பயணம் என்கிற தங்களின் புதிய திட்டம் வரும் வரை, தற்போதுள்ள இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்’’  என்று எழுத்தாளர் ராம் தங்கம் வலியுறுத்தியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு
கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட “மகளிர் விடியல் பயணம்” திட்டம் மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட்டது. இத்திட்டத்தை அண்டை மாநிலங்களும் வெகுவாகப் பாராட்டின. முன்பு, மகளிர் இலவசமாகப் பயணிப்பதற்கான பேருந்துகளில் “மகளிர் விடியல் பயணம்” என்ற பெயர்ப்பலகை தெளிவாக வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்துப் பெண்கள் எந்தவிதக் குழப்பமும் இன்றிப் பயணம் செய்து வந்தனர்.
ஆனால், தற்போது தவெக ஆட்சி அமைந்த பிறகு, பேருந்துகளில் அந்தப் பெயர்ப்பலகை காணப்படுவதில்லை. இதனால் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்கள், “இந்தப் பேருந்தில் ஏறினால் டிக்கெட் எடுக்க வேண்டுமா? அல்லது முன்பு போல இலவசமாகப் பயணிக்கலாமா?” என்ற கேள்வியுடனும், தடுமாற்றத்துடனும் பதற்றமடைகிறார்கள். எனவே, பெண்கள் அனைவரும் எவ்வித அச்சமும், சந்தேகமும் இன்றிப் பயமின்றிப் பயணிக்கும் வகையில், மீண்டும் பேருந்துகளில் “மகளிர் விடியல் பயணம்” என்ற பெயர்ப்பலகையைத் தெளிவாக வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பயணம் என்கிற தங்களின் புதிய திட்டம் வரும் வரை, தற்போதுள்ள இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
ராம் தங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here