தென்மேற்கு பருவக்காற்று வலிகிவிட்டது என்றும் இன்னும் 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் தொடங்கும்.
வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் சற்று வலுவிழந்து காணப்படும்.
அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் வரும் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது
தென்மேற்கு பருவமழை காலத்தில் 354 மிமீ மழை பெய்துள்ளது. வழக்கமான அளவைவிட தென்மேற்கு பருவமழை 8 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.
சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 74 சதவீதம் அதிகம் பெய்துள்ளது.