உலக வங்கி தயாரித்த ஜி20 ஆவணம் இந்தியாவின் முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) இந்தியாவில் ஒரு மாறுதலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்திற்கு அப்பாலும் நீட்டித்துள்ளது. உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்திற்கான ஜி20 உலகளாவிய கூட்டாண்மை ஆவணம் (https://www.g20.org/content/dam/gtwenty/gtwenty_new/document/G20_POLICY_RECOMMENDATIONS.pdf) மத்திய அரசின் கீழ் கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பாராட்டியுள்ளது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் மத்திய அரசு எடுத்த அற்புதமான நடவடிக்கைகள் மற்றும் அரசு கொள்கை மற்றும் ஒழுங்குமுறையின் முக்கியப் பங்கை இந்த ஆவணம் எடுத்துக்காட்டுகிறது.
அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரம்: இந்தியாவின் டிபிஐ அணுகுமுறையைப் பாராட்டிய உலக வங்கி ஆவணம், சுமார் ஐம்பது ஆண்டுகள் தேவைப்படுவதை வெறும் 6 ஆண்டுகளில் இந்தியா சாதித்துள்ளது.
ஜன்தன், ஆதார், செல்பேசி ஆகியவற்றை இணைத்த பணப்பரிவர்த்தனை, வயதுவந்தோரில் 2008 ஆம் ஆண்டில் 25% ஆக இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 80%-க்கும் அதிகமாகியுள்ளது. இதற்காக டிபிஐ-களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
2015 மார்ச் மாதத்தில் 147.2 மில்லியனாக இருந்த பிரதமரின் மக்கள் நிதித்திட்ட கணக்குகளின் எண்ணிக்கை ஜூன் 2022-ல் 462 மில்லியனாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது; இந்தக் கணக்கு வைத்திருப்போரில் 56 சதவீதம் பேர் பெண்கள். இந்த எண்ணிக்கை 260 மில்லியனுக்கும் அதிகமாகும்
2023 மே மாதத்தில் மட்டும் சுமார் 14.89 டிரில்லியன் ரூபாய் மதிப்புள்ள 9.41 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடந்துள்ளன.
2022-23 நிதியாண்டில், யுபிஐ பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீதமாகும்.
பிப்ரவரி 2023-ல் செயல்படுத்தப்பட்ட இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான யுபிஐ-பேநவ் இணைப்பு, ஜி20-ன் அனைவரையும் உட்படுத்திய பொருளாதார முன்னுரிமைகளுடன் இணைந்துள்ளது. மேலும் விரைவான, குறைந்த செலவிலான, மிகவும் வெளிப்படையான, எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.