மத்திய அரசின் 11 பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் வேலைக்கு ஆள் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 4,545 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள், ஜுலை 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பணி: கிளார்க் – 11 பொதுத்துறை வங்கிகள்.
பங்கேற்கும் வங்கிகள்: Bank of Baroda, Canara Bank , Indian Overseas Bank, UCO Bank, Bank of India, Central Bank of India, Punjab National Bank, Union Bank of India,
Bank of Maharashtra, Indian Bank, Punjab & Sind Bank.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. கம்யூட்டரில் வேலைபார்க்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்; Certificate / Diploma / Degree in computer operations / Language / should have studied Computer / Information Technology as one of the subjects in the High School / College / Institute
வயது: 01.07.2023 அன்றைய நிலவரப்படி 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி உச்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். https://www.ibps.in/ எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175. மற்றவர்களுக்கு ரூ.850.
தேர்வு முறை:
- முதல்நிலைத்தேர்வு – (கொள்குறி வகை) Preliminary Examination :
- ஆங்கிலம்: 30 வினாக்கள், 30 மதிப்பெண்.
- எண்ணியல் திறன் Numerical
Ability : 35 வினாக்கள், 35 மதிப்பெண். - பகுத்தறிவுத் திறன் Reasoning
Ability : 35வினாக்கள், 35 மதிப்பெண். - மொத்தம் 100 மதிப்பெண்.
முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை) Main Examination:
- பொது / நிதி விழிப்புணர்வு (General/ Financial
Awareness) : 50 வினாக்கள், 50 மதிப்பெண். - பொது ஆங்கிலம் : 40 வினாக்கள், 40 மதிப்பெண்.
- பகுத்தறியும் திறன் மற்றும் கணினித் திறன் (Reasoning Ability & Computer Aptitude): 50 வினாக்கள்.
- அளவு தகுதி (Quantitative Aptitude): 50 வினாக்கள், 50 மதிப்பெண்.
- மொத்த வினாக்கள்: 190, மொத்த மதிப்பெண்: 200.
(ஆங்கிலத் தேர்வைத்தவிர மற்ற தேர்வுகளுக்கான வினாக்கள் ’இந்தி, ஆங்கிலம், தமிழ்’ ஆகிய மொழிகளில் இருக்கும்)
தேதிகள்:
ஆன்லை விண்ணப்பம்: ஜுலை 1-ம் தேதி முதல் ஜுலை 21 ம் தேதி வரை.
முதல்நிலைத் தேர்வு (ஆன்லைன்): ஆகஸ்ட் / செப்டம்பர்
முதன்மைத்தேர்வு (மெயின் – ஆன்லைன்) : அக்டோபர்
தேர்வு முடிவு: ஏப்ரல் 2024
மேலும் கூடுதல் விபரங்களையும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வது குறித்த முழு விபரங்களையும் அறிந்து கொள்ள https://www.ibps.in/ என்ற இணையத்தை பார்க்கவும். இவ்வேலை குறித்த தகவல் ஏட்டை முழுமையாக படித்து அதன் பிறகு விண்ணப்பிப்பது நன்று.