Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131
”இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்..!” திருக்கோயில்கள் சார்பில் 34 திருமணங்களை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - Madras Murasu
spot_img
More
    முகப்புஆன்மிகம்''இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்..!'' திருக்கோயில்கள் சார்பில் 34 திருமணங்களை நடத்தி வைத்து முதலமைச்சர்...

    ”இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்..!” திருக்கோயில்கள் சார்பில் 34 திருமணங்களை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 7.7.2023 சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை.

    இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 34 இணையர்களுக்கு நம் அனைவருடைய வாழ்த்துகளோடு இங்கு மண விழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    திருக்கோயில்களின் சார்பில், இதனை மிகச் சிறப்பாக எப்போதும் என்னால் ‘செயல்பாபு’ ‘செயல்பாபு’ என்று அழைக்கப்படக்கூடிய அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் முன்னின்று இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்! இதற்காக நான் வழக்கம் போல் அவரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

    ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிச் நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்!
    குறிப்பாக, கல்வி – தொழில் – பொருளாதாரம் – சமூகம் – சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.
    எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.

    இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள்.

    சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது.

    ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற கருத்தியல் என்பது இதுதான். நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது.

    அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக்கொண்டு மிக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைக்கு நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது.

    கோயில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.

    ‘கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது’ என்று பராசக்தி திரைப்படத்தில் அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதினார் அப்படி கோயில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் தலைவர் கலைஞர் அவர்கள் எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலம் என்பது அனைத்துத் துறைகளிலும் பொற்காலமாக இருந்ததைப் போலவே, இந்து சமய அறநிலையத் துறையிலும் இன்றைக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

    நான் பெருமையோடு சில செய்திகளை, சாதனைகளை பட்டியலிட விரும்புகிறேன். நம்முடைய கழக ஆட்சி மலர்ந்த பிறகு, திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன.
    தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனை நான் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பாக வெளியிட்டேன்.
    கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

    நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களின் எண்ணிக்கையை 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

    ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு, 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலமாக கோயில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். அதைத்தான் நம்முடைய அரசும் விரும்புகிறது. இதுதான் திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்!
    மறைந்த பெரியவர் – தவத்திரு குன்றக்குடி அடிகளார் ‘கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்’ என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன.

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொல்வது இதன் அடிப்படையில்தான். அந்த வகையில்தான் 34 இணையருக்கு திருக்கோயில்கள் சார்பில் திருமண விழாக்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.
    இந்தத் துறைக்கு இந்து சமயத் துறை என்று பெயரல்ல, இந்து சமய அறநிலையத் துறை என்று பெயர். அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற அறப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று நான் அனைவரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    எனவே, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை உங்களோடு சேர்த்து, நானும் மனதார, நெஞ்சார வாழ்த்துகிறேன். அதேநேரத்தில் நம்முடைய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள், தமிழ் உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

    புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்’’ இருந்து நீங்கள் பாடுபடுங்கள், பணியாற்றுங்கள், உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டு, வாழ்க மணமக்கள், வாழ்க மணமக்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
    நன்றி, வணக்கம்.

    RELATED ARTICLES

    ஒரு பதிலை விடவும்

    தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
    இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

    - Advertisment -
    Google search engine

    Most Popular

    Recent Comments