அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுலிவன், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்தியா – அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுலிவன், பிரதமரிடம் விளக்கினார். பிரதமர் மோடியை அமெரிக்காவில் வரவேற்க அதிபர் பைடன் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக சுலிவன் எடுத்துரைத்தார்.
இந்தியா – அமெரிக்கா இடையே விரிவான சர்வதேச உத்திசார் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதற்கும் வலுப்பெற்று வருவதற்கும் பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். அதிபர் பைடனுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி எடுத்துரைத்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுலிவன் பிரதமர் நரேந்திர மோடியை 13.06.2023 டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தியா – அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளின் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சிக் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுலிவன், பிரதமரிடம் விளக்கினார். பிரதமர் மோடியை அமெரிக்காவில் வரவேற்க அதிபர் பைடன் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக சுலிவன் எடுத்துரைத்தார்.
இந்தியா – அமெரிக்கா இடையே விரிவான சர்வதேச உத்திசார் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதற்கும் வலுப்பெற்று வருவதற்கும் பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். அதிபர் பைடனுடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள், இருநாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சர்வதேச பிரச்சனைகள் போன்றவை குறித்து கலந்துரையாடுவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தமது அமெரிக்கப் பயணம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி, சுலிவனிடம் எடுத்துரைத்தார்.