Madras Murasu

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை 15 டிஜிட்டல் சொத்துகள் சேவை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்.

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விதிமுறைகளைப் பின்பற்றாத 15 டிஜிட்டல் சொத்துகள் சேவை நிறுவனங்களுக்கு இந்திய நிதிசார் நுண்ணறிவுப் பிரிவு நோட்டீஸ்.

இந்தியாவில் சட்ட விதிகளுக்கு உட்படாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டம், 2002-ன் பிரிவு 13-ன் கீழ், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத 15 டிஜிட்டல் சொத்துகள் சேவை நிறுவனங்களுக்கு இந்திய நிதிசார் நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில் வீக்ஸ், ப்ளோஃபின், ரெஸோரெக்ஸ், பிட்யூனிக்ஸ், டிஜிஃபினெக்ஸ், டூபிட், எக்ஸ்டி டாட் காம், லடோக்கன், வூ எக்ஸ், பயோனெக்ஸ், சேஞ்ச்நௌ, சிம்பிள்ஸ்வாப், ஃபிக்ஸட்ஃப்ளோட், ஒயிட்பிட், கார்டேரியன் ஆகிய சேவை நிறுவனங்கள் அடங்கும்.

இந்தியாவில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்படாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் இந்த நிறுவனங்களின் செயலிகள், இணையதள இணைப்புகளைப் பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகளின்படி அவற்றை முடக்குவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2023 மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் சொத்துகள் சேவை நிறுவனங்கள் பணமோசடி தடுப்பு, பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவில் இயங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு டிஜிட்டல் சொத்துகள் சேவை நிறுவனங்கள், இந்திய நிதிசார் நுண்ணறிவுப் பிரிவிற்கு தகவல் தெரிவிக்கும் அமைப்பாகப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும். கிரிப்டோ கரன்சிகள், என்எஃப்டி ஆகியவை சட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்படாதவை என்பதால், இவற்றில் முதலீடு செய்வது அதிக ஆபத்து நிறைந்தது எனவும், இவற்றில் ஏற்படும் இழப்புகளுக்கு எவ்வித ஒழுங்குமுறைத் தீர்வும் கிடைக்காது எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

As part of compliance action against non-compliant entities, the Director, Financial Intelligence Unit-India (FIU-IND) has issued notices for non-compliance to following fifteen (15) Virtual Digital Assets Service Providers (VDA SPs) under Section 13 of the Prevention of Money Laundering Act, 2002(PMLA) as under:-

 

S. No Trade Name Entity Name
1 Weex Weex International Exchange LTD
2 Blofin BLF Global Limited
3 Rezorex RezorEx
4 Bitunix Bitunix LLC
5 DigiFinex DigiFinex Ltd
6 Toobit Hopeful Technology Co. Ltd.
7 XT.com Fibtc Ltd/ XT TECHNICAL PTE. LTD.
8 Latoken LAtrade Ltd
9 WOO X Wootech Limited
10 Pionex Marketa Trading Inc.
11 ChangeNow CHN Group LLC
12 SimpleSwap SimpleSwap LTD
13 Fixedfloat FFGX Group LLC
14 WhiteBIT UAB Clear White Technologies
15 Guardarian FinSeven CZ
Scroll to Top