அரசு மற்றும் தனியார் ஐடிஐ-க்களில் இந்தக் கல்வி ஆண்டுக்கான நேரடி மாணவர் மாணவியர் சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டின் விவரங்கள் :
சேர்க்கை அவகாச நீட்டிப்பு
-
கடைசி நாள்: இந்த ஆண்டு ITI நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சேர்க்கை முறை: மாணவர்கள் தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் தங்களுக்கு விருப்பமான தொழில்பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று சேரலாம்
-
வேலைவாய்ப்பு மற்றும் பாடப்பிரிவுகள்
-
தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் ITI-களில் தொழில் 4.0 (Industry 4.0) உட்பட அனைத்து நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
-
கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெற்றவர்களில் 95% பேருக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
-
திறனுக்கேற்ப மாதச் சம்பளம் ₹20,000 முதல் ₹30,000 வரை பெறலாம்.
-
8-ஆம் வகுப்பு / 10-ஆம் வகுப்பு முடித்துச் சேரும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்வுகளை எழுதி, முறையே 10 மற்றும் 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களைப் பெறலாம். மேலும், பாலிடெக்னிக் பாடப்பிரிவுகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் (Lateral Entry) சேர முடியும்.

அரசு ITI மாணவர்களுக்கான சலுகைகள்
-
பயிற்சிக் கட்டணம் இல்லை.
-
மாதாந்திர கல்வி உதவித்தொகை: ₹750/-
-
கூடுதல் உதவித்தொகை: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் / புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ₹1,000/- கூடுதலாக வழங்கப்படும்.
-
இலவச வசதிகள்: மிதிவண்டி, சீருடை, காலணிகள் (Shoes), பயிற்சிக் கருவிகள் மற்றும் இலவச பேருந்து பயண வசதி.
-
சில அரசு ITI-களில் விடுதி வசதியும் உண்டு.
தொடர்பு எண்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்குக் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
-
அலைபேசி எண்: 9499055642
-
வாட்ஸ்அப் (WhatsApp) எண்: 9499055612
