Madras Murasu

WAVES 2027 Create in India Challenge Season 2 invites media and entertainment organizations to submit industry-led competition proposals.

வேவ்ஸ் 2027 ‘இந்தியாவில் படைப்போம்’ போட்டி: ஜூலை 31-க்குள் முன்மொழிவுகள் வரவேற்பு

வேவ்ஸ் 2027 இந்தியாவில் படைப்போம் போட்டி பருவம் 2-ன் கீழ், தொழில்துறை வழிநடத்தும் போட்டிகளுக்கு 31.07.2026-க்குள் முன்மொழிவுகளை அனுப்பலாம்.
மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டின் கீழ் உள்ள முதன்மை முன்னெடுப்பான, இந்தியாவில் படைப்போம் போட்டி பருவம் 2-ன் கீழ், தொழில்துறை வழிநடத்தும் போட்டிகளைக் கருத்தாக்கம் செய்தல், வடிவமைத்தல், மற்றும் செயல்படுத்தலுக்காக, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பணிபுரியும் பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கும், போட்டிகளையும் அவற்றைச் செயல்படுத்தும் அமைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், வெளிப்படையான, தகுதி அடிப்படையிலான வழிமுறையின் மூலம் ஓர் ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படைப்போம் போட்டி பருவம் 2-ன் நோக்கம், தொழில்துறை வழிநடத்தும், அரசு ஆதரவுடனான, இளைஞர்களை மையமாகக் கொண்ட போட்டிகளை செயல்படுத்துவதாகும். இப்போட்டிகள் படைப்பாற்றல் திறமைகளைக் கண்டறிந்து வளர்ப்பது, திறன் மேம்பாடு மற்றும் ஆற்றல் அதிகரிப்பதை ஊக்குவிப்பது, வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி அளிப்பது, புத்தாக்கத்தை ஊக்கப்படுத்துவது, மற்றும் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மீடியா மற்றும் பிற தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் படைப்பாற்றல் துறைகள் உள்ளிட்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் முழுவதும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் உச்சக்கட்டமாக, வேவ்ஸ் 2027 நிகழ்வின்போது வெற்றியாளர்களும் வெற்றிபெற்ற முடிவுகளும் காட்சிப்படுத்தப்படும்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களது முன்மொழிவுகளை https://wavesbazaar.com/create-india-challenge/season2/ifp என்ற இணையதளத்தின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள், அதாவது 31.07.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த போட்டி முன்மொழிவுகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து இருக்கலாம்.

Scroll to Top