பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் தற்போது பிளஸ் 2 படித்து வருபவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
2025, 2026 ஆகிய ஆண்டுகளில் பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 2027-ல் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு இயற்பியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடத்தகுதிகள் அவசியம். பி.ஆர்க். மற்றும் பி.பிளானிங் படிப்புகளுக்கு தனித்தனி பாடத்தகுதிகள் உள்ளன.
விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தேர்வு நடைபெறும் தேதி:
முதல் அமர்வு (Session 1) தேர்வு 2027 ஜனவரி 20, 21, 22, 23, 24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இரண்டாவது அமர்வு (Session 2) தேர்வு ஏப்ரல் 2 முதல் 7 வரை நடைபெறும்.
கணினி வழியில் (CBT) தேர்வு நடத்தப்படும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
விண்ணப்பிக்கும் தேதி:
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 24.10.2026.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2026 (இரவு 11.50 மணி).
தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க: நவம்பர் 23 முதல் 26 வரை.
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய: நவம்பர் 27 முதல் 29 வரை.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு ஆண்கள் – ரூ.1,000; பெண்கள் – ரூ.800.
ஓபிசி-என்சிஎல் / இ.டபிள்யூ.எஸ். ஆண்கள் – ரூ.900; பெண்கள் – ரூ.800.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ.500.
முக்கிய இணையதளம்:
மாணவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு கட்டணம் செலுத்தி உறுதிப்படுத்தல் பக்கத்தை (Confirmation Page) பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள் ஒரே பார்வையில்
| விவரம் | தேதி |
|---|---|
| விண்ணப்பக் கடைசி நாள் | 22.11.2026 |
| தாமதக் கட்டண விண்ணப்பம் | 23–26.11.2026 |
| தேர்வு நகர அறிவிப்பு | 30.12.2026 |
| ஹால் டிக்கெட் | 13.01.2027 |
| முதல் அமர்வுத் தேர்வு | 20–28.01.2027 |
