தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4 ஆம் தேதி முதல் இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர், ந.க.எண்.71176/2023/எப்.2, நாள் 20.11.2026 என்ற கடிதத்தின் அடிப்படையில், சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களை இனசுழற்சி அடிப்படையில் நிரப்புவதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்
| விவரம் | தகவல் |
|---|---|
| துறை | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை |
| பணி | கிராம ஊராட்சி செயலாளர் |
| மொத்த காலிப்பணியிடங்கள் | மாவட்ட வாரியாக அறிவிக்கப்படும் https://tnrd.tn.gov.in/ |
| பணியிடம் | சென்னை தவிர தமிழ்நாடு அனைத்து மாவட்டங்கள் |
| கல்வித்தகுதி | 10ஆம் வகுப்பு தேர்ச்சி |
| ஊதிய நிலை | Level 2 |
| மாத ஊதியம் | ரூ.15,900 – ரூ.58,500 |
| விண்ணப்ப முறை | இணையவழி |
மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள்
சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இடஒதுக்கீட்டு இனசுழற்சி விவரங்கள் தனியாக வெளியிடப்பட உள்ளன. தற்போது கிடைத்துள்ள அறிவிப்பில் மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை.
வயது வரம்பு
01.07.2026 அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது கணக்கிடப்படும்.
| இடஒதுக்கீட்டுப் பிரிவு | வயது வரம்பு |
|---|---|
| பொதுப்பிரிவினர் | 18 – 35 |
| BC / BCM / MBC / DNC | 18 – 37 |
| SC / SCA / ST | 18 – 40 |
| ஆதரவற்ற விதவைகள் | 18 – 40 |
| மாற்றுத்திறனாளிகள் | அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் கூடுதல் சலுகை |
| முன்னாள் ராணுவத்தினர் – பொதுப்பிரிவு | 18 – 50 |
| முன்னாள் ராணுவத்தினர் – BC / BCM / MBC / DNC / SC / ST | 18 – 55 |
கல்வித்தகுதி
-
விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
-
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
- கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- சம்பள விவரம் ஊதிய நிலை – ₹15,900 – ₹58,500 அரசு நிர்ணயித்த ஊதிய விகிதம்
விண்ணப்பக் கட்டணம்
| பிரிவு | கட்டணம் |
|---|---|
| பொதுப்பிரிவு | ரூ.100 |
| BC / BCM / MBC / DNC | ரூ.100 |
| SC / ST | ரூ.50 |
| மாற்றுத்திறனாளிகள் | ரூ.50 |
முக்கியத் தேதிகள்
-
டிசம்பர் 4, 2026
இணையவழி விண்ணப்பம் தொடக்கம்
-
டிசம்பர் 18, 2026
விண்ணப்பிக்க கடைசி நாள் – இரவு 11.59 மணி
-
டிசம்பர் 23, 24, 28, 29, 30, 2026
விண்ணப்பங்கள் பரிசீலனை மற்றும் தெரிவுப்பட்டியல் தயாரித்தல்
-
ஜனவரி 5, 2027
நேர்காணல் அழைப்புக் கடிதம்
-
ஜனவரி 19 – 21, 2027
நேர்காணல்
-
ஜனவரி 25, 2027
தேர்வு முடிவுகள்
-
ஜனவரி 27, 2027
பணி நியமன ஆணை
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பிக்கலாம்:
-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
-
கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்ப இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
-
தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
-
கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
-
உரிய விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்த வேண்டும்.
-
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதன் நகலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnrd.tn.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்
ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!
முன்னதாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட கிராம ஊராட்சிகளில் ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த ஊராட்சிகளில் புதிய விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 1:5 தெரிவுப்பட்டியல் தொடர்பான விதிமுறைகளும் தொடர்ந்து பொருந்தும்.
