Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the acf domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the og domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the subscribe2 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the woocommerce domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the fast-indexing-api domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sharing-image domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the td-cloud-library domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php on line 6131

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 87

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/functions.php:6131) in /home/u296778325/domains/madrasmurasu.com/public_html/wp-includes/feed-rss2.php on line 8
#sekarbabu - Madras Murasu https://madrasmurasu.com | Tamil News Online | Madras Murasu | Employment News | Thu, 19 Oct 2023 08:40:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 ’’பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்..! அமைச்சர் கே.என்.நேரு https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25b5%25e0%25ae%25ae%25e0%25ae%25b4%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25af%2588-%25e0%25ae%258e%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%258a%25e0%25ae%25b3%25e0%25af%258d%25e0%25ae%25b3-%25e0%25ae%259a https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a/#respond Thu, 19 Oct 2023 08:40:53 +0000 https://madrasmurasu.com/?p=6999 ’’வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது’’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் என்னென்ன பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன், முடிவு செய்யப்பட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள […]

The post ’’பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்..! அமைச்சர் கே.என்.நேரு first appeared on Madras Murasu.

]]>
’’வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது’’ என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் என்னென்ன பணிகளை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டவுடன், முடிவு செய்யப்பட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், மழை பெய்வதற்கு முன்பதாக அனைத்து பணிகளையும் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், அனைத்துப் பகுதிகளுக்கும் இந்த வருடம் ஒதுக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.

சென்னைக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து சாலைகளும் முழுமையாக போடப்பட்டுள்ளது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, சாலைப் பணிகள் உள்ளிட்ட பணிகளுக்காக கிட்டத்தட்ட ரூ.2000 கோடியினை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்தார். இவற்றில் முதற்கட்டமாக 5000 சாலைப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கான நிவாரண மையங்கள் மற்றும் மையங்களில் தங்குபவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது.

வடகிழக்குப் பருவமழை

மழையின் காரணமாக விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் மர அறுவை இயந்திரங்கள், மழைநீர் தேங்கினால் அவற்றை அகற்றும் வகையில் 700 க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு மழைநீர் எளிதில் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு, ‘’சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் சரக்குந்து முனையத்திற்கு ரூ.30.30 கோடிக்கான காசோலையும் மற்றும் அதேபேல் சென்னையில் சிறுசிறு தெருக்களில் இருக்கின்ற குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றுவதற்கு மிகுந்த பயனுள்ள இயந்திரமான பாப்கேட் என்று சொல்லக்கூடிய இயந்திரத்தை வாங்குவதற்காக ரூ.12.75 கோடி மதிப்பீட்டில் 51 பாப்கேட் ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் (51 Bobcat Skid Steer Loaders) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்ட நிதியிலிருந்து மொத்தம் ரூ.43.05 கோடிக்கான காசோலைகள் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது’’ என்றார்.

The post ’’பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்..! அமைச்சர் கே.என்.நேரு first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%9a/feed/ 0
’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-100-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2592%25e0%25ae%25b0%25e0%25af%2581-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf-%25e0%25ae%258e%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25aa%25e0%25ae%25a4%25e0%25af%2581-100-%25e0%25ae%258e%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-100-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/#respond Sat, 14 Oct 2023 05:22:13 +0000 https://madrasmurasu.com/?p=6836 ’’தி.மு.கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  விழாவில் பேசினார். 13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு […]

The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
’’தி.மு.கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி’’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  விழாவில் பேசினார்.

13.10.2023 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

‘வாலிபப் பெரியார்’ என்று போற்றப்படும் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவை மிகக் குறுகிய காலத்தில் எழுச்சியுடனும், ஏற்றத்துடனும் இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அமைச்சர் சேகர்பாபு -க்கு முதலில் தலைமைக் கழகத்தின் சார்பில் என் நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

யாரும் கணக்குப் போடாத காலத்தில்…

இந்த நூற்றாண்டு விழாவை, ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தாமல், புகைப்படக் கண்காட்சியையும், அடுத்து ஆசைத்தம்பி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு சிறு ஆவணப்படத்தையும் தயாரித்து வழங்கக்கூடிய ஒரு பன்முக விழாவாக இதை நடத்திக் கொண்டிருக்கிறார். எதற்காக கழக முன்னோடிகளைப் போற்றும் இத்தகைய விழாக்களை நடத்துகிறோம்? என்றால், அண்ணன் துரைமுருகன் அவர்கள் எடுத்துச் சொன்னது போல, அவர்களது புகழைப் பரப்புவதற்காக மட்டுமா நடத்துகிறோம்? இல்லை… வரக்கூடிய காலக்கட்டத்தில் வருங்கால சமுதாயத்திலும் ஆற்றல்மிக்க ஆசைத்தம்பிகள் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற விழாக்களை நடத்துகிறோம்!

நீதிக்கட்சியின் தலைவர்!

‘ஒருகாலம் வரும்… சட்டமன்ற உறுப்பினராக ஆவோம்; நாடாளுமன்ற உறுப்பினராக ஆவோம்…’ என்றெல்லாம் யாரும் கணக்குப் போடாத காலத்தில், திராவிட இயக்கத் தூணாக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நம்முடைய ஆசைத்தம்பி அவர்கள்.
நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞர் அவர்களின் சம காலத்தவரான அண்ணன் ஆசைத்தம்பி அவர்கள், தலைவர் கலைஞரைவிட ஐந்து மாதம் இளையவர்.
1938-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களை, இந்தி எதிர்ப்புப் போராட்டம் திருவாரூர் வீதியில் தமிழ்க் கொடி தாங்கி போராட வைத்தது. அதே ஆண்டில் திராவிட இயக்க எண்ணத்தால் தீவிரமாக உருவானவர்தான் நம்முடைய ஆசைத்தம்பி. அவருடைய தந்தையார் பழனியப்பன், விருதுநகர் மாவட்டத்தில் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்.

திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார்!

விருதுநகர் என்பதே நீதிக்கட்சியின் கோட்டையாக இருந்த நகரம்! அங்கிருந்து உருவானவர்தான் நம்முடைய ஆசைதம்பி அவர்கள். பள்ளிப்பருவ காலத்திலேயே திராவிட இயக்க மாணவர்களை இணைத்து சங்கம் தொடங்கி பல்வேறு அமைப்புகளைத் உருவாக்கி, மேடைகளில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.
பேரறிஞர் அண்ணா நடத்திய திராவிட நாடு – சி.பா. ஆதித்தனார் நடத்திய தமிழன் போன்ற இதழ்களில் இளமைக் காலத்திலேயே எழுதத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிற்காலத்தில் ‘தனி அரசு’ என்ற இதழை அவர் நடத்தினார். முதலில் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அதற்கு பிறகு சில ஆண்டுகள் நாளிதழாகவும் வந்திருக்கிறது. ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தினத்தந்தி’ என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது ஆசைத்தம்பியின் தனியரசு நாளிதழ்.
பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞரைப் போல ஏராளமான கதைகள் – நாவல்கள் எழுதியிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் எழுதி இருக்கிறார். கதைகளில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தியவர் அவர்.
தலைவர் கலைஞர் திரைக்கதை – வசனம் எழுதிய ’பராசக்தி’ திரைப்படம் எத்தகைய தாக்கத்தை நமது தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படுத்தியதோ அதை அனைவரும் தெளிவாக அறிந்திருக்கக் கூடியவர்கள். அந்த பராசக்தி கதையில் வரும் பாத்திரங்களை வைத்தே ‘கசந்த கரும்பு’ என்ற கதையை எழுதியவர் ஆசைத்தம்பி.

திராவிடர்கள்
திராவிடர் இயக்கம் ஏன்?
தனியரசு ஏன்?
காந்தியார் சாந்தியடைய… போன்ற பல்வேறு கட்டுரைகளை அவர் அந்தக் காலக்கட்டத்தில் எழுதி திராவிட இயக்கத்தவர்களுக்கு உணர்வூட்டிய படைப்புக்களை படைத்திருக்கிறார்! அதிலும் குறிப்பாக ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற புத்தகம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணல் காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட வேதனையில் எழுதப்பட்ட மிகச்சிறிய புத்தகம் அது. கோட்சே என்ற கொடியவனை – மனதில் இருக்கும் மதவாதத்தைக் கண்டித்து அந்த நூல் எழுதப்பட்டது. இந்த புத்தகம் வகுப்புவாதத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லி அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது.

50 ரூபாய் நிதி!

ஆசைத்தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும் – 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், அன்றைய தினம் கழகத்தின் அமைப்புக்குழுச் செயலாளராக இருந்த மதிப்பிற்குரிய என்.வி.நடராசன் அவர்களிடம் இந்த வழக்கை கண்காணிக்கும் பொறுப்பை அவரிடத்தில் ஒப்படைத்தார். வழக்கு நடத்துவதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி திரட்டும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தன. அதில் முதல் ஆளாக 50 ரூபாய் நிதி வழங்கினார் பேரறிஞர் அண்ணா.

ஆசைத்தம்பிக்கு பிணை கிடைத்தது. ஜாமின் கிடைத்தது. சிறையில் இருந்து அவரை விடுவிப்பதற்கு முன்னதாக அவரை கட்டாயப்படுத்தி அவருக்கு மொட்டை அடித்து, கொடுமைப்படுத்தியது சிறைத்துறை. நிர்வாணம் ஆக்கினார்கள். பின்னர் கட்டிக் கொள்ள கோவணம் தரப்பட்டது. துறையூரைச் சேர்ந்த புத்தக வெளியீட்டாளர்களான தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருடன் சேர்த்து ஆசைத்தம்பிக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.

சிறைச்சாலை என்ன செய்யும்?

இது கழகத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் அனைவருடைய மனதில் ஒரு வேகத்தை, கோபத்தை, ஆத்திரத்தை உண்டாக்கியது. மொட்டை அடிக்கப்பட்ட இந்த மூவர் படத்தையும் பேரறிஞர் அண்ணா, தனது திராவிடநாடு இதழில் வெளியிட்டார். கண்காட்சியில் இது இடம் பெற்றிருக்கிறது. இதை பார்த்தால் தெரியும். நாடு முழுவதும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அண்ணா அவர்கள் உத்தரவிட்டார். கோவில்பட்டியில் நடந்த கழக செயற்குழுவில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசினார், ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற சுந்தராம்பாள் பாட்டை பாடிக் காட்டினார். பாடி விட்டு, சிறைச்சாலை என்ன செய்யும் தெரியுமா? மொட்டை அடிக்கும் என்று முழங்கினார்.

அந்தக் காலத்தில் திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்ட புத்தகங்கள் ஏராளமாக தடை செய்யப்பட்டன. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்ற நூல் தடை செய்யப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை தடை செய்யப்பட்டது. புலவர் குழந்தையின் இராவண காவியம் தடை செய்யப்பட்டது. கலைஞரின் நாடகங்கள் – நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் எல்லாம் தடை செய்யப்பட்டன.

புத்தகங்களைப் படித்தார்கள்!

அந்த வரிசையில் ஆசைத்தம்பி அவர்களின் ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற நூலும் தடை செய்யப்பட்டது. கழகத்தைச் சேர்ந்த அனைவர்க்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கட்டளையை பிறப்பித்தார். ‘எந்த புத்தகத்தை தடை செய்கிறார்களோ – அந்த புத்தகத்தை பொது இடத்தில் தெருவிளக்கு கம்பத்தின் கீழ் நின்று கொண்டு கூட்டமாக படியுங்கள்’ என்று அண்ணா கட்டளையிட்டார்.

கூட்டம் கூட்டமாக நமது தொண்டர்கள், அந்த புத்தகங்களைப் படித்தார்கள். இலங்கையில் இந்த புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டார்கள். மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். இது இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டையில் எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று கழகத் தொண்டர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
பேரறிஞர் அண்ணாவின் ஆரியமாயை நூலையும், ஆசைத்தம்பியின் ‘காந்தியார் சாந்தியடைய’ நூலையும் விற்றார்கள் என்று கைது செய்யப்பட்டார்கள். வண்ணாரப்பேட்டையில் நின்றுகொண்டு அஞ்சாமல் முழக்கம் போட்டுள்ளார்கள் இந்த மூவரும். அத்தகைய வண்ணாரப்பேட்டையை உள்ளடக்கிய வடசென்னைப் பகுதியில்தான் இன்றைய தினம் ஆசைத்தம்பிக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!

அவருடைய புத்தகம் விற்றதால், 1950-ஆம் ஆண்டு கைது செய்தார்கள். ஆட்சிக்கு வந்து அதே பகுதியில் அவருக்கு நூற்றாண்டு விழாவை இன்றைக்கு நாம் கம்பீரத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி!

திராவிட இயக்கத் தோழர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருமை! இத்தகைய அடக்குமுறையைப் பற்றியோ, கைது செய்யப்படுவதைப் பற்றியோ, சிறைச்சாலை சித்திரவதைகள் பற்றியோ ஆசைத்தம்பி எந்தக் காலத்திலும் கவலைப்பட்டவரல்ல!
மிசாவில் எங்களோடு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். எண்ணிப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக, சென்னை சிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தார்கள் என்று சொன்னால், அதில் எதற்கும் அஞ்சாமல் ஒரு சிறிதும் கவலைப்படாமல் இருந்த நம்பர்-1 கைதி யார் என்று கேட்டால் ஆசைத்தம்பி தான். நான் இப்போதும் சொல்கிறேன், தைரியமாக சொல்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார். நாங்கள் எல்லாம் சிறைக்கு புதிது. எங்களைப் போன்றோர் சிறைக்கு புதிது. எங்களுக்கெல்லாம் தைரியம் ஊட்டியவர். சிறை என்றால் என்ன என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். அவரிடத்தில் பல பேர் சென்று கேட்பார்கள். எப்போது விடுவிப்பார்கள்? கவலைப்படாதீர்கள், 1 year, 1 year என்று சொல்வார். அவ்வளவு கூலாக சொல்வார். அவரைப்போல ஒரு ஜென்டில்மேனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை. எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்.

‘திராவிடர் கழகம்’

கணக்குப் போட்டு பார்த்தேன், மொத்தம் 24 முறை, இனம் –மொழி –நாடு காக்கப்போராடி சிறை சென்றவர் நம்முடைய ஆசைத்தம்பி. எப்போதுமே தனது மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் பயப்படாமல், வெளிப்படையாக எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் பேசுபவர்தான் ஆசைத்தம்பி -க்கு உண்டு.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், அன்றைய நீதிக்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் சரியாக இல்லை என்பதையும் மேடைகளில் பேசி இருக்கிறார். பேரறிஞர் அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் ‘ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும்’ என்று 1943-ஆம் ஆண்டு கட்டுரை தீட்டியவரும் ஆசைத்தம்பி. இதை வைத்துப் பார்த்தால் ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி தான் என்றுகூட சொல்லலாம். அங்கே அண்ணன் திருநாவுக்கரசு உட்கார்ந்திருக்கிறார். நம்முடைய திராவிட இயக்கத்தின் எடுத்தாளர். முரசொலியில் இரண்டு நாட்களாக ஆசைத் தம்பி-யைப் பற்றி தொடர் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறது. 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியபோது, தலைவர் கலைஞர் பொறுப்பு வகித்த கழகப் பிரச்சாரக் குழுவில் உறுப்பினராக ஆசைத்தம்பி இடம் பெற்றார்.

இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர்!

விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக தனது மக்கள் பணியைத் தொடங்கினார். கழகம் முதன்முதலாகப் தேர்தல் களத்தில் நின்றபோது 1957-ஆம் ஆண்டு நின்றபோது சட்டமன்றத் தேர்தலில் நாம் 15 தொகுதிகளை வென்றோம். அந்த 15 பேரில் ஒருவர்தான் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆயிரம் விளக்கில் பின்னாளில் நான் சட்டமன்ற உறுப்பினராக வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன், அதுதான் எனக்கு பெருமை.
1967-ல் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதில் என்ன சிறப்பு என்றால், இரண்டு தேர்தலிலும் அந்தக் காலத்தில் செல்வாக்காக இருந்த இரண்டு அமைச்சர்களை தோற்கடித்தவர் ஆசைத்தம்பி. ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்ற அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் வெங்கடசாமி போட்டியிட்டார். அவரை ஆசைத்தம்பி தோற்கடித்தார். அதே போல் எழும்பூர் தொகுதியில், அன்றைய அமைச்சர் ஜோதி வெங்கடாசலம் அவரை எதிர்த்து நின்று அவரையும் தோற்கடித்தார்.

பெரியார் இயக்கம்!

அதற்கு பிறகு 1977-ல் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் ஒரே ஒருவர் தான், ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு, ஆசைத்தம்பி வடசென்னையிலிருந்து வெற்றி பெற்றார். கழகத்தில் ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் அண்ணன் ஆசைத்தம்பி. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றும்போது, கடைசியாக, நிறைவாக உரையாற்றும்போது, “இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று முழங்கியவர் ஆசைத்தம்பி. அப்போதே முழங்கியிருக்கிறார். “ஒற்றை மொழி – ஒற்றை மத நாடாக மாற்றிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார். அவரது நாடாளுமன்ற உரைகளில் இன்னொன்றையும் வலியுறுத்தி இருக்கிறார். “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! எனவே, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!” என்றும் ஆசைத்தம்பி அங்கே பேசி இருக்கிறார்.

தி.மு.க.வில் இருந்தாலும் தி.க-வின் மீது அதிகமான பற்றுக் கொண்டவர் ஆசைத்தம்பி அவர்கள். தி.மு.க. – தி.க. ஆகிய இரண்டு இயக்கங்களும் இணைந்து ஒரு போராட்டத்தை நடத்தி, கைது செய்யப்பட்டு அத்தனை பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘வாலிப பெரியார்’

காலையில் அனைத்து கைதிகளையும் நிற்க வைப்பார்கள், Superintendent வந்து செக் செய்வார். தி.மு.க.வினர் தனியாகவும் – தி.க.வினர் தனியாகவும் நின்றுள்ளார்கள். அப்போது கலைஞர் அவர்கள் கேட்கிறார், ஏன் இப்படி பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள் என்று ஆசிரியர் வீரமணி கேட்டுள்ளார். “ஜெயிலர்தான் நிற்கச் சொன்னார்” என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார். “ஆசைத்தம்பி எங்கே நிற்கிறார்?” என்று தலைவர் கலைஞர் கேட்டிருக்கிறார். திராவிடர் கழக வரிசையில் நின்று கையை தூக்கி இங்கே இருக்கிறேன் என்று ஆசைத்தம்பி சொல்கிறார். அந்தளவுக்கு பெரியார்வாதியாக இருந்ததால்தான், அவர் இன்றைக்கு ‘வாலிப பெரியார்’ என்று அவர் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆசைத்தம்பி அவர்களின் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தி வைத்தார். அவரது மகள் காந்தி திருமணத்தையும் தந்தை பெரியார்தான் நடத்தி வைத்தார். மகன் செளந்தரபாண்டியன் திருமணத்தை தலைவர் கலைஞர் நடத்தி வைத்தார்.

கலைஞர் கதறினார்!

திராவிடக் கோட்டையின் தலைமைத் தளபதியாக இருந்தவர் அவர். அத்தகைய ஆசைத்தம்பியை நாம் அந்தமானில் இழந்தோம். அந்தமானில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கழகக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது களைப்பாக இருக்கிறது – கண்ணைக் கட்டுவது போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். மூளையில் இரத்தக் குழாய் வெடித்து அங்கேயே இறந்தும் போனார். அவரது உடலை அங்கிருந்து எடுத்து வருவதற்கே பெரிய அளவில் போராட்டம் நடந்தது. அவரது உடலைப் பார்த்து தலைவர் கலைஞர் கதறினார். ஏனென்றால் தனது இறுதி உரையில் அந்தமானில் பேசுகிறபோது, கலைஞர் சார்பில் உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுதான் பேசி இருக்கிறார் ஆசைத்தம்பி.

தனது இறுதி உரையில், ‘திராவிட இயக்கம் துவங்காமல் போயிருந்தால் கேட்பாரற்ற அனாதைகளாக ஆகியிருப்போம்’ என்று சொன்னவர் ஆசைத்தம்பி அவர்கள். இதுதான் அவரது மரண சாசனம்! அந்தக் கூட்டத்தில், அந்தமானில் இருக்கக்கூடிய கழகத் தோழர்கள் ஆசைத்தம்பியை பலரும் புகழ்ந்து பேசினார்.

நின்று காத்தவர் ஆசைத்தம்பி!

இறுதியாக அவர் சொன்னார்: “இவை எதுவும் எனக்கு கிடைத்த புகழ் அல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இருப்பதால் கிடைத்த பெருமை!” என்று சொன்னவர் ஆசைத்தம்பி.

கழகத்தின் ஒவ்வொரு பொறுப்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டான சொற்கள் இவை! ஆசைத்தம்பி பற்றி நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் சொல்கின்றபோது, “கலைஞரின் நெஞ்சில் வேல்பாய்ந்தால் அந்த வேலை எடுத்து எதிரியின் நெஞ்சிலே பாய்ச்சும் வீரம் கலைஞருக்கு உண்டு. கலைஞரின் முதுகில் யாராவது வேல் பாய்ச்சிவிடக் கூடாது என்பதற்காக, நின்று காத்தவர் நம்முடைய ஆசைத்தம்பி” என்று சொன்னார்.

இதுதான் ஒவ்வொரு தொண்டருக்குமான இலக்கணம்! ஆசைத்தம்பி மறைந்தபோது தலைவர் கலைஞர் அவர்கள் உருக்கமாக எழுதினார்கள்.

“என் அன்பே! ஆசைத்தம்பி! நீ மறையவில்லை. மறைய மாட்டாய். உன்னையும் உன் உறுதியையும் நாங்கள் மறக்க மாட்டோம்” – என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள்!

ஆசைத்தம்பியை நாம் மறக்கவில்லை; அவரது உறுதியை மறக்கவும் முடியாது என்பதன் அடையாளமாகத்தான் இந்த நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ‘வாலிபப் பெரியார்’ ஆசைத்தம்பி அவர்களின் புகழ் வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்.

The post ’’ஒரு எம்.பி. என்பது 100 எம்.பிக்கு சமம் என்பதை அப்போதே நிரூபித்தார் ஆசைத்தம்பி..! முதல்வர் மு.க.ஸ்டாலின் first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-100-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/feed/ 0
’’ஆயிரம் குடமுழுக்கு..!’’ முரசொலி https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%259f%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581 https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#respond Wed, 13 Sep 2023 06:25:38 +0000 https://madrasmurasu.com/?p=6268 “இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருப்பது பெருமை பொங்கும் சொற்கள் மட்டுமல்ல -– உண்மையே அதுதான். ‘நாத்திகர்கள் கட்சி’ என்று கட்டமைத்து, ‘இவர்கள் ஆட்சியிடம் இருந்து கோவில்களைப் பறிக்க வேண்டும்’ என்று ஒரு கும்பல் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆயிரமாவது குடகுழுக்கை நடத்தி இந்தக் கும்பலின் தலையில் மண்ணைப் போட்டுவிட்டது தி.மு.க. அரசு. சென்னை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் […]

The post ’’ஆயிரம் குடமுழுக்கு..!’’ முரசொலி first appeared on Madras Murasu.

]]>
“இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருப்பது பெருமை பொங்கும் சொற்கள் மட்டுமல்ல -– உண்மையே அதுதான். ‘நாத்திகர்கள் கட்சி’ என்று கட்டமைத்து, ‘இவர்கள் ஆட்சியிடம் இருந்து கோவில்களைப் பறிக்க வேண்டும்’ என்று ஒரு கும்பல் துடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஆயிரமாவது குடகுழுக்கை நடத்தி இந்தக் கும்பலின் தலையில் மண்ணைப் போட்டுவிட்டது தி.மு.க. அரசு.

சென்னை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் குடமுழுக்கு விழா மிகமிகச் சிறப்பாக நடந்துள்ளது. கழக ஆட்சி ஆறாவது முறையாக மலர்ந்ததற்குப் பிறகு – – இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நடந்துள்ள கோவில் குடமுழுக்கு விழாக்களில் 1000 ஆவது குடமுழுக்குதான் இந்த காசி விசுவநாதர் கோவிலில் நடந்தது ஆகும். இதை வைத்துத்தான், ‘இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி’ என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அரசிடம் இருந்து கோவிலைப் பறித்து சூறையாட நினைக்கும் கும்பல்களால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது.

‘அனைத்துத் துறைகளின் வளர்ச்சி’ என்பதைத்தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அப்படித்தான் செயல்படுத்தியும் வருகிறார்கள். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பது இதன் உள்ளடக்கம் ஆகும்.

எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்துத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றமும் தந்துள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இன்னார்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்பதையும் மாற்றி, பெண்கள் அர்ச்சகர் ஆக முடியாது என்பதையும் மாற்றி சமத்துவம் உலாவும் இடமாக கோவில்கள் மாறி இருக்கின்றன.

திருக்கோயில்கள் சார்பில் –- 10 கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டு விட்டன.

அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com, BBA, BCA, B.Sc Computer Science ஆகிய நான்கு பாடப் பிரிவுகள் மட்டுமல்ல, சைவ சித்தாந்தமும் கற்றுத் தரப்படுகிறது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் இது செயல்பட்டு வருகிறது. கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் தொடங்கப்பட்டு விட்டது கோவில் கல்லூரிகள்.

திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யவே வல்லுநர் குழு அமைக்கப் பட்டது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் செய்யப்படுகின்றன.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோயில்களி லுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

1250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணி களையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருக்கிறார்.

கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றப்பின் திருக்கோயில்களின் எண்ணிக்கையை தலா 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இப்படி அனைத்துக் கோவில்களும் புத்துயிர் பெறுவது அந்தக் கும்பலுக்கு பிடிக்கவில்லை.

இன்னும் சொன்னால் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத் துறையே மிகமிகச் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியது.

1970 ஆம் ஆண்டுக்கு முன்னதாக அறநிலையத் துறைக்குத் தனி அமைச்சரோ, சட்டப்பேரவையில் அறநிலையத் துறைக்கு என தனி விவாதமோ நடந்தது இல்லை. வேறு ஏதாவது ஒரு துறையோடு சேர்த்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையை நடத்துவார்கள். முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் அறநிலையத்துறைக்கு தனியான மானியக் கோரிக்கை விவாதம் நடத்துவது தொடங்கப்பட்டது.

1967 முதல் 1975 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் ஐந்தாயிரம் கோவில்களுக்கான திருப்பணிகளும், 1996 -– 2001 காலக்கட்டத்தில் 2,459 கோவில்களுக்கு திருப்பணிகளும், 2006 – 2011 காலக்கட்டத்தில் 4 ஆயிரத்து 539 கோவில்களுக்குத் திருப்பணிகளும் நடத்தியவர் முதல்வர் கலைஞர்.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான கோவில் களைக் கொண்டு வந்து சேர்த்தவர் கலைஞர். அவரது ஆட்சியில் தான் கோவில் சொத்துக்களும் அதிகம் ஆனது. கோவில்களின் வருமானமும் அதிகம் ஆனது. 1989, 1996 ஆண்டுகளில் ஆன்மிகப் பெரியவர்களைக் கொண்டு அறநிலையப் பாதுகாப்புக் குழுவை அமைத்தவர் கலைஞர். கிராமப்புற பூசாரி களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிவித்தவரும் அவரே. திருக்கோவில் தொடர்பான ஆகம விதிகள் வடமொழியில் உள்ளதை தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட முயற்சிகள் செய்தார். போற்றி புத்தகங்களை வெளியிட்டார். இவை அனைத்தும் மீண்டும் இப்போதும் வெளியிடப்பட்டு வருகின்றன.

அன்றைய மடாதிபதிகள் எப்படி கலைஞர் ஆட்சியை பாராட்டினார்களோ – – அதே வகையில் இன்றைய மடாதிபதிகள் இன்றைய முதல்வரையும் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இறை நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை யையும் சேர்த்துப் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. அதனால்தான் அவரை குறி வைக்கிறது ஒரு கும்பல். அந்த கும்பல் உண்டியலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் தி.மு.க. அரசு, பக்தர்களைப் பற்றி மட்டுமே அக்கறையோடு செயல்படுகிறது.

The post ’’ஆயிரம் குடமுழுக்கு..!’’ முரசொலி first appeared on Madras Murasu.

]]>
https://madrasmurasu.com/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/ 0